ஸ்ரீ மகானந்தா சினிமஸ் நிறுவனம் சார்பில் ஆர்.முருகேசன் தயாரித்திருக்கும் படம் ‘கம்பெனி’. எஸ்.தங்கராஜ் இயக்கியிருக்கும் இப்படத்தில் பாண்டி, முருகேசன், திரேஷ் குமார், பிரித்வி, வலினா, காயத்ரி, வெங்கடேஷ், ரமா, சஞ்ஜீவ் பாஸ்கரன், சேலம் ஆர்.ஆர். தமிழ்செல்வன் ஆகியோர் நடித்திருக்கிறார்கள். ஏ.எஸ்.செந்தில்குமார் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு ஜுபின் இசையமைத்துள்ளார். விவேகா பாடல் எழுதியுள்ளார். இப்படத்தின் டிரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழா இன்று சென்னை பிரசாத் லேபில் நடைபெற்றது.
இதில், இயக்குநர் பாரதிராஜா, தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு, தயாரிப்பாளர் கே.ராஜன், நாக் ஸ்டுடியோ கல்யாணம், கில்டு தலைவர் ஜாக்குவார் தங்கம், சேலம் ஆர்.ஆர் தமிழ்செல்வன் உள்ளிட்ட பலர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துக்கொண்டார்கள். பாரதிராஜா குத்துவிளக்கு ஏற்றி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் பேசிய ஜாக்குவார் தங்கம், ‘நடிகர், நடிகைகளை சில ஊடகத்தினர் தரக்குறைவாக பேசுகிறார்கள், அவர்களை நான் தொடர்பு கொள்ள முயற்சித்தேன். ஆனால் போனை எடுக்கவில்லை. அதனால், அவர்கள் எங்கிருந்தாலும் என்னிடம் பேச வேண்டும், என்று தெரிவித்துக்கொள்கிறேன். இல்லை என்றால் அவர்களின் வீட்டுக்கு நான் வருவேன், என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன் என்றார். இனி சினிமாக்காரர்களை தரக்குறைவாக பேசுவதை பார்த்துக்கொண்டு சும்மா இருக்க மாட்டோம். சரியான செய்தியை போடுங்கள் அதை விட்டுவிட்டு, தவறான பொய்யான செய்திகளை போடாதீர்கள், உங்களுக்கும் குடும்பம் இருக்கிறது மறந்துவிடாதீர்கள், என்பதை இங்கு தெரிவித்துக்கொண்டு, கம்பெனி படம் மிகப்பெரிய வெற்றி பெற வேண்டும் என்று வாழ்த்துகிறேன்.” என்றார்.