• Tue. May 30th, 2023

பூசணிக்காய் பச்சடி

தேவையானவை:

பழப்பூசணிக்காய் – கால் கிலோ, தேங்காய் துருவல் – 4 டீஸ்பூன், பச்சை மிளகாய் – 1, பொடித்த வெல்லம் – 4 டீஸ்பூன், புளித்தண்ணீர் – ஒரு சிறிய கப், கடுகு – அரை டீஸ்பூன், காய்ந்த மிளகாய் – ஒன்று, எண்ணெய், உப்பு – தேவையான அளவு.
செய்முறை:
பழப்பூசணிக்காயை தோல் சீவி பொடியாக நறுக்கி, உப்பு, புளித்தண்ணீர், வெல்லம் சேர்த்து வேகவிடவும். தேங்காய் துருவல், பச்சை மிளகாயை அரைத்து சேர்க்கவும். கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, காய்ந்த மிளகாய் தாளித்துக் கொட்டவும்.
குறிப்பு:
இந்தப் பச்சடி, பொரித்த குழம்புக்கு சிறந்த காம்பினேஷன். இதை எளிதாக தயாரிக்கலாம். பரங்கிக்காயுடன் வெல்லம், இஞ்சி, மிளகாய் சேர்த்து அரைத்து ஜாம் தயாரிக்கலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *