• Mon. Aug 31st, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

மதுரையில் எஸ்டிபிஐ கட்சியின் மத்திய தொகுதி சார்பாக போராட்டம்

Byp Kumar

Dec 27, 2022

மதுரையில்மத்திய மாநகராட்சி மத்திய மண்டலம் எண் 3 அலுவலகம் முற்றுகை போராட்டம் நடைபெற்றது.
மதுரையில் எஸ்டிபிஐ கட்சியின் மத்திய தொகுதி சார்பாக மத்திய தொகுதி தலைவர் சர்தார் தலைமையில்,மதுரை மத்திய மண்டலம் எண் 3 அலுவலகம் முற்றுகை போராட்டம் நடைபெற்றது.

இந்த முற்றுகை போராட்டத்தில் எஸ்டிபிஐ கட்சியின் தெற்கு மாவட்ட தலைவர் சீமான் சிக்கந்தர் , மண்டல செயலாளர் முஜிபுர் ரகுமான் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.மதுரை 54வது வார்டு, காஜிமார் தெரு, குப்புபிள்ளை தோப்பு, பெருமாள் கோவில் தெரு பகுதிகளில் பாதாள சாக்கடை கழிவுநீர் தொடர்ந்து வெளியேறிக் கொண்டிருப்பதை தொடர்பாக அதிகாரிகளிடம் பலமுறை முறையிட்டும் முறையான தீர்வுகள் ஏற்படாத அவல நிலையை கண்டித்து எஸ்டிபிஐ கட்சியின் மத்திய தொகுதி சார்பாக ,மதுரை மத்திய மண்டலம் எண் 3 அலுவலகம் முற்றுகை போராட்டம் நடைபெற்றது.இறுதியாக மண்டல உதவி ஆணையர் அவர்களிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.இதில் மாவட்ட பொதுச் செயலாளர் சாகுல் ஹமீது உட்பட மாவட்ட தொகுதி நிர்வாகிகள் கட்சி செயல் வீரர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.