• Sun. Aug 9th, 2026
WhatsAppImage2026-08-06at2018242
previous arrow
next arrow
Read Now

நெல்மணிகளை கொள்முதல் செய்யவில்லை விவசாயிகள் குற்றச்சாட்டு..,

ByP.Thangapandi

Jul 16, 2026

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே செல்லம்பட்டி ஊராட்சி ஒன்றிய உட்பட்ட கொடிக்குளம் கிராமத்தில் சுமார் நூற்றுக்கு மேற்பட்ட ஏக்கரில் விவசாயிகள் கோடை நெல் பயிரிடப்பட்டு அறுவடை செய்யப்பட்டு வருகின்ற சூழலில்,

இந்நிலையில் இக் கிராமத்தில் நெல் கொள்முதல் நிலையம் செயல்பட்டு வருகிறது.,

இந்நிலையில் விவசாயிகள் அறுவடை செய்யப்பட்ட நெல்மணிகளை நெல் கொள்முதல் நிலையத்தில் கொட்டி வைக்கப்பட்டுள்ளது.,

கொட்டி வைக்கப்பட்டவை பழைய நெல்கள் எனவும் அதனை கொள்முதல் செய்ய அதிகாரிகள் மறுப்பதாகவும் ஒரு நெல் முட்டைக்கு 100 ரூபாய் கொள்முதல் செய்ய கேட்பதாகவும் விவசாயிகள் குற்றம் சாட்டிய நிலையில்

தகவல் அறிந்து விரைந்து வந்த மண்டல மேலாளர் சுகிபிரேமலா, மேலாளர் தர கட்டுப்பாட்டு அலுவலர் விஜி மணிகண்டன் தலைமையில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.,

இதில் விவசாயிகளுக்கும் அதிகாரிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.,

தொடர்ந்து அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி இது ஒரு வருட பழைய நெல் எனவும் இதனை ஆய்வுக்கு எடுத்துச் செல்வதாகவும் தரம் குறைவாக உள்ளதாகவும் தெரிவித்தனர்., மேலும் முறையான ஆவணங்களில் இல்லை எனவும் ஒரு நெல் முட்டைக்கு 100 ரூபாய் கொள்முதல் செய்ய அதிகாரிகள் கேட்பதாக கூறும் குற்றச்சாட்டுகள் உண்மையில்லை என தெரிவித்தனர்.,