• Sat. Apr 20th, 2024

மாணவிகள் தற்கொலை செய்துகொள்ள வேண்டாம்- இயக்குனர் ஏ.ஆர்.கேந்திரன் முனியசாமி

Byp Kumar

Dec 27, 2022

ஓங்காரம் திரைப்பட ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில்பாலியல் தொந்தரவுக்கு ஆளாகும் மாணவிகள் தற்கொலை செய்துகொள்ள வேண்டாம் கைகூப்பி வேண்டுகோள் விடுத்த – இயக்குனர் ஏ.ஆர்.கேந்திரன் முனியசாமி வேண்டுகோள்
‘அய்யன்’, ‘சேது பூமி ‘ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் ஏஆர்.கேந்திரன் முனியசாமியின் இயக்கத்தில் தயாராகி இருக்கும் புதிய திரைப்படம் ‘ஓங்காரம் இந்தப் படத்தில் இயக்குநரான ஏஆர்.கேந்திரன் முனியசாமி கதாநாயகனாக நடிக்க, கதாநாயகியாக நடிகை வர்ஷா விஸ்வநாத் நடித்திருக்கிறார்.இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பாக நடைபெற்ற ஓங்காரம் திரைப்பட ட்ரெய்லர் வெளியீட்டுவிழாவின் போது விழாவில் கலந்துகொள்வதற்காக கதாநாயகி வர்ஷா 1லட்சம் கேட்டதாக கூறி விழாவிற்கு வர மறுத்ததாக நடிகர் கஞ்சா கருப்பு மேடையிலயே திட்ட பேசியது சர்ச்சையை ஏற்படுத்தி பெரும்விவாத பொருளானது.இந்நிலையில் ஓங்கார படக்குழுவானது இன்று மதுரை செய்தியாளர் அரங்கில் செய்தியாளர்களை சந்தித்து பேசியபோது :

வரும் 30ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ள ஓங்காரம் திரைப்படம் நிச்சயம் தமிழ் திரையுலகில் மிகப்பெரிய வெற்றி பெறும் , கதாநாயகி ட்ரெய்லர் வெளியீட்டு விழாவை புறக்கணித்தது தொடர்பாக நாயகி மன்னிப்பு கேட்டுவிட்டார் எனவும், இப்படம் மதுரையின் கதைக்களம் தான், தமிழக மக்களின் மீதான நம்பிக்கையில் இந்த திரைப்படத்தை வெளியிடுகிறோம் .பள்ளி கல்லூரிகளில் மாணவிகள் பாலியல் தொல்லைக்கு ஆளாகி தற்கொலை செய்யும் சம்பங்களுக்கு எதிரான திரைப்படம் இது எனவும்,கல்வி நிறுவனங்களில் இதுபோன்ற சம்பவங்கள் நாடு முழுவதும் நடைபெறுகிறது. மாணவிகளுக்கு எதிராக நடைபெறும் அநீதியை அழிக்கும் ஒலி தான் ஓம்காரம்
மதுரை என்றாலே வன்முறை என்பது போன்ற நிலை இல்லாமல் மருத்துவத்திற்காக எடுக்கும் ஆயுதம் போன்றது ஓங்காரம் திரைப்படம் எனவும் தெரிவித்தார்.இத்திரைப்படம் தமிழகம் முழுவதிலும் 100 முதல் 150வரை திரையரங்குகளில் வெளியிடவுள்ளோம்.திரைப்படங்களில் நடிப்புத்திறமை தான் முக்கியம் இது மொழி இனம் சார்ந்தது அல்ல என்றார்.நிச்சயமாக அடுத்த திரைப்படத்தில் தமிழ்நாட்டில் உள்ள கதாநாயகிகளை செய்தியாளர்களே அழைத்துவந்தால் வாய்ப்பளிப்பேன் என்றார்.முதல்முறையாக தமிழ் சினிமாவில் ஆபாசம் இல்லாத தமிழ் திரைப்படத்தை இயக்கி வெளியிடவுள்ளோம், குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை முகம் சுளிக்காமல் ரசிக்கும் வகையிலான படம்.கல்வி நிறுவனங்களுக்கு படிக்க அனுப்பிவைத்தவிட்டு நம்பிக்கையோடு இருக்கும் குடும்பத்தினருக்கு துரோகம் செய்பவர்களுக்கு எதிரான , பாலியல் தொந்தரவுக்கு ஆளாகும் மாணவிகள் தற்கொலைக்கு செல்வதை தடுக்கும் திரைப்படம் .மாணவிகள் பாலியல் தொந்தரவு அளிக்கும் நபர்களை தண்டிக்க கற்றுக்கொள்ள வேண்டும் கையெடுத்து கும்பிட்டு கெஞ்சினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *