ஆஸ்ட்ரோசைட்டோபதி என்ற அரிதான ஆட்டோ இம்மியூன் Immune) நோய்க்கு இந்தியாவில் சிகிச்சையளிக்கும் முதல் மருத்துவமனை. என்ற பெருமையை மீனாட்சி மிஷன் மருத்துவமனை பெற்றுள்ளது.
தென்தமிழ்நாட்டின் முன்னணி பன்முக சிறப்பு மருத்துவமனை என புகழ் பெற்றிருக்கும் மீனாட்சி மிஷன் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையம், மூளை மற்றும் முதுகுத்தண்டின் இயக்கங்களை பாதிக்கின்ற அரிதான மற்றும் சமீபத்தில் வரையறை செய்யப்பட்டிருக்கும் நோய் ஆட்டோ இம்மியூன் ஆகும்.இந்த நோய்க்கு 31 வயதான ஒரு பெண்மணிக்கு வெற்றிகரமாக சிகிச்சையளித்திருக்கிறது. இந்தியாவில் இந்நோய்க்கு சிகிச்சை வழங்கப்பட்டிருப்பது இதுவே முதன்முறையாகும். இன்டராவினஸ் ஆன்ட்டிபயாட்டிக் மற்றும் சீராய்டு மருந்துகளை கொண்டு 10 நாட்கள் வழங்கப்பட்ட சிகிச்சையைத் தொடர்ந்து இந்த பெண் நோயாளி அவரது பாதிப்பிலிருந்து முழுமையாக குணம் பெற்றிருக்கிறார். அதைத் தொடர்ந்து மருத்துவமனையிலிருந்து நலமாக வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டார்
உடலின் நோயெதிர்ப்பு மண்டலமானது, நரம்பு மண்டலத்திலுள்ள Gial Fibrillary Acidic Protein (GFAP) என அறியப்படும் ஒருவகை புரதத்தை தாக்கும்போது 2016-ம் ஆண்டில் முதன் முறையாக வரையறை செய்யப்பட்ட GFAP ஆஸ்ட்ரோசைட்டோபதி என்ற நோய் பாதிப்பு ஏற்படுகிறது. ஸ்டீராய்டுகளைக் கொண்டு இதற்கு சிகிச்சையளிக்க முடியும் என்றாலும் கூட வேறு வகையான நரம்பு மண்டல தொற்றுகளின் அறிகுறிகளைப் போலவே இந்நோயின் அறிகுறிகளும் இருக்கின்றன. ஆகவே, இந்நோயை சரியாக அடையாளம் கண்டு உறுதி செய்வது ஒரு சவாலாக இருக்கும். இங்கு சிகிச்சைக்கு வந்த இப்பெண் நோயாளியின் பாதிப்பும் இதிலிருந்து மாறுபட்டதல்ல. காய்ச்சல், தலைவலி, நடத்தை சார் செயல்பாட்டில் மாற்றம் 2 வார காலம் இருந்த உடலின் கீழ்ப்பகுதி பக்கவாதம் ஆகிய அறிகுறிகள் அவருக்கு இருந்தன. இந்த அறிகுறிகள் அனைத்துமே பொதுவாக ஒரு CNS தொற்றை சுட்டிக்காட்டுவதாக இருக்கும்.
மீனாட்சி மிஷன் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையத்தின் நரம்பியல் துறையின் மருத்துவர் S. நரேந்திரன் இந்நோயாளிக்கு செய்யப்பட்ட நோயறிதல் மற்றும் சிகிச்சை பற்றி விளக்கும்போது, “இந்த பெண் நோயாளிக்கு காய்ச்சல், தலைவலி பிரச்சனைகள் இருந்தன. சிறுநீர் பை நிரம்பிய உணர்வு இருந்தபோதிலும் சிறுநீர் கழிப்பது சிரமமானதாக இவருக்கு இருந்தது. உடலின் இரு பக்கங்களிலும் கீழ்ப்புற உறுப்புகளில் (இடுப்பிறகு கீழே) பலவீனமும் மற்றும் அவரது உணர்திறன் கண்ணோட்டங்கள் மாற்றமடைய தொடங்கிய நிலையில் எமது மருத்துவமனைக்கு இப்பெண்மணி அழைத்து வரப்பட்டார். கழுத்தில் விரைப்புத்தன்மையும், மார்பிற்கு கீழே உணர்திறன் இழப்பும் இருப்பதாக அவர் தெரிவித்தார் ஆன்ட்டிபயாட்டிக் மற்றும் ஸ்டீராய்டு மருந்துகளை கொண்டு தொடக்கத்தில் இவருக்கு நாங்கள் சிகிச்சை அளித்தோம்’ என்று கூறினார் இந்த சந்திப்பின் போது மீனாட்சி மிஷன் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையத்தின் மருத்துவ நிர்வாகி டாக்டர் கண்ணன் மற்றும் முதுநிலை நிபுணர் டாக்டர் டி.சி.விஜய் உடன் இருந்தனர்