மதுரை வடக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் சோழவந்தானில் கர்மவீரர் காமராஜரின் 124 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.

அதனைத் தொடர்ந்து காங்கிரஸ் வடக்கு மாவட்ட தலைவர் நூர் முகமது மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகள் ஊர்வலமாக வந்து சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவில் அருகில் உள்ள வ உ சி சிலை முன்பு,
ஊழல் மற்றும் லஞ்சத்துக்கு எதிராக தமிழக காங்கிரஸ் முன்னெடுக்கும் மக்கள் இயக்கம் ஆதரவு தாரீர்…
என்ற விளம்பர போர்டை வ உ சி சிலை முன்பு வைத்து கையெழுத்து மற்றும் கைரேகை பதிவு நிகழ்ச்சியை தொடங்கி வைப்பதற்காக மாவட்ட தலைவர் நூர் முகமது வருகை தந்து நிகழ்ச்சியை நடத்திக் கொண்டிருந்தார்.
அப்போது அங்கு வந்த சோழவந்தான் பகுதியை சேர்ந்த வ.உ.சி பேரவையின் நிர்வாகி வா உ சி சிலை இருக்கும் இடத்திற்கு முன்பு பேனர் வைக்க கூடாது என்று கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டு உடனடியாக பேனரை அகற்ற கூறினார். இதனை அடுத்து காங்கிரஸ் மதுரை வடக்கு மாவட்ட தலைவர் நூர் முகமது அவரிடம் ஒரு மணி நேரத்தில் நிகழ்ச்சி முடிந்து விடும் தற்காலிகமாகதான் பேனர் வைக்கப்பட்டுள்ளது. இதனை பெரிது படுத்த வேண்டாம் என பேசிக்கொண்டு இருந்தார் ஆனால் இதனை ஏற்காத வ உ சி பேரவை நிர்வாகி கண்டிப்பாக பேனர் வைக்க கூடாது உடனடியாக பேனரை அகற்ற வேண்டும் என தொடர்ந்து கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்.

அப்போது அங்கு வந்த காங்கிரஸ் நிர்வாகிகள் வ உ சி என்பவர் ஒரு ஒரு சமுதாயத்துக்கு மட்டும் தலைவர் கிடையாது சுதந்திர போராட்ட தியாகி காங்கிரஸ் கட்சிக்கும் அவர் தலைவர்தான் ஆகையால் இதை பெரிது படுத்த வேண்டாம் என நிர்வாகிகள் கூறிய நிலையில் தொடர்ந்து வ.உ.சி பேரவையின் நிர்வாகி பேனரை அப்புறப்படுத்த கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்.
அப்போது எதைச்சையாக வ உ சி சிலையின் அருகில் உள்ளே இருந்த விடுதலைப் புலிகளின் தலைவர் மறைந்த பிரபாகரன் படத்தை பார்த்த காங்கிரஸ் கட்சியினர் வ உ சி தேச தலைவர் வ உ சி படத்திற்கு அருகில் எப்படி பிரபாகரன் படத்தை வைக்கலாம் உடனடியாக அதனை அகற்ற வேண்டும் என்று எதிர்வினை கூறி காங்கிரஸ் கட்சியினரும் அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதனால் சுமார் அரை மணி நேரத்திற்கு மேலாக அந்த இடத்தில் பதட்டமான சூழ்நிலை காணப்பட்டது.
அதன் பிறகு காங்கிரஸ் கட்சியினர் கூறுகையில்
நாளை வ உ சி சிலையின் அருகில் உள்ள விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் படம் இருக்கக்கூடாது அப்படி இருந்தால் சோழவந்தான் பேரூராட்சி அலுவலகத்திற்கு சென்று காங்கிரஸ் கட்சி சார்பில் பிரபாகரன் படத்தை அகற்ற கூறி மனு கொடுப்போம் மேலும் இதை எங்களின் கட்சி தலைமைக்கும் கொண்டு சென்று சோழவந்தானில் போராட்டம் நடத்துவதற்கு ஏற்பாடுகள் செய்வோம் என்று கூறினார்.
இந்த சம்பவம் காரணமாக அந்த பகுதியில் அரை மணி நேரத்திற்கு மேலாக பதட்டமான சூழ்நிலை நிலவியது இதே போன்ற சம்பவம் கடந்த ஆறு மாதத்திற்கு முன்பு கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தியபோது வ.உ.சி சிலை முன்பு பேனர் வைத்த நிலையில் அப்போதும் வ உ சி பேரவையின் நிர்வாகிகள் வந்து பேனரை அகற்ற கோரி வாக்குவாதத்தில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது தொடர்ச்சியாக இது போன்ற விரும்பத்தகாத சம்பவங்கள் நடைபெற்று வரும் நிலையில் காவல்துறை இதற்கு நிரந்தர தீர்வு காண வேண்டுமென சமூக ஆர்வலர்கள் பொதுமக்கள் கூறுகின்றனர்.




