புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் சட்டமன்ற தொகுதி எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் ரகுபதி என்று முறைப்படி தனது எம்எல்ஏ அலுவலகத்தில் திறந்து வைத்து தனது பணியை தொடங்கினார்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ரகுபதி

பழனியில் கோவில் நிலம் விற்கப்பட்டு உயர்நீதிமன்றத்தாலே ரத்து செய்யப்பட்ட போதிலும் அதைப்போல கரூரிலே ஒரே நாளிலேயே 3058 நிலங்கள் பதிவு செய்யப்பட்டது லஞ்சம் வாங்காத உத்தமர் சி எம் விஜய் சார் அவருடைய ஆட்சியினுடைய லட்சணத்திற்கான எடுத்துக்காட்டு
ஆட்சியாளர்களின் பங்கேற்க பங்களிப்பு இல்லாமல் இந்த தவறுகள் நடந்திருக்க வாய்ப்பே கிடையாது.
பழனியை பொருத்தவரைக்கும் இங்கே துணை ஆணையராக இருக்கக்கூடியவர் நிலப்பதிவு செய்யக்கூடாது என்பதை தொடர்ந்து அழுத்தம் கொடுத்து தடுத்துக் கொண்டே இருக்கிறார்.
அதே நேரத்திலே அங்கே அந்த பத்திரப்பதிவுனுடைய சார்பதிவாளரும் மறுத்துக் கொண்டிருக்கிறார்
இருவரும் மறுத்த நிலையிலே அங்கே அவரை விடுமுறையிலே செல்ல சொல்லிவிட்டு அடுத்த நாளிலே அங்கே இருக்கக்கூடிய அந்த துணை ஆணையருக்கு உயர் பதவி கொடுத்து அந்த பதவியை உடனடியாக சேர சொல்லி அதற்கான பணிகளை பார்க்க சொல்லிவிட்டு இரண்டு தடுப்பாளர்களையும் தடுத்து விட்டு பத்திரப்பதிவு மோசடியாக நடந்துள்ளது.
தற்போது இந்த விஷயத்தில் சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளனர் இந்த விசாரணை முடிவில் தான் ஊழல் குறித்து தெரியவரும்.
கரூரில் தமிழக வெற்றிக் கழகத்தில் எம் ஆர் விஜயபாஸ்கர் இணைந்த பிறகு அவருக்கு சகாயம் செய்ய வேண்டும் என்பதற்காக கோவில் நிலங்கள் பத்திர பதிவு செய்வதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஏனென்றால் அதில் பல ஏக்கர் பரப்பளவில் எம் ஆர் விஜயபாஸ்கரின் ஆதரவாளர்களுக்கு இடம் உள்ளது
நாகர்கோவிலில் சிறைச்சாலையில் குட்கா விற்றவர் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் 25 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டதாக அவர்கள் கூறுகின்றனர் ஆனால் அவர் கொடுக்க மறுக்கவே அவரை கொலை செய்துவிட்டனர்
இந்த ஆட்சியில் மக்களுக்கு எதிரான செயல்கள் தான் நடைபெற்று கொண்டுள்ளது
தமிழகத்தில் எங்கு சென்றாலும் தமிழக வெற்றி கழகத்தினர் குட்கா விற்கின்றனர்
மேலும் அவர்களை மணலும் கடத்துகிறார்கள் நடவடிக்கை எடுப்பதற்கு காவல்துறை சமூக ஆர்வலர்கள் அழுத்தம் கொடுத்தால் மேல்நிலை உத்தரவு நாங்கள் எதுவும் செய்ய முடியாது என்று கூறுகிறார்கள் யார் அந்த மேலிடம் என்பதை சிஎம் சார் விளக்க வேண்டும்
அமைச்சர்கள் அனைவரும் தங்கள் இஷ்டத்திற்கு அவர்கள் எந்த அமைச்சர் எந்த இலக்கை என்பது கூட தெரியாமல் அவர்கள் யுத்தத்திற்கு செயல்பட்டு வருகின்றனர்
ஹலோ மிஸ்டர் சிஎம் சார் கொஞ்சம் கண் விழித்துக் கொண்டு தமிழகத்தில் நடப்பதை பாருங்கள்
முதலமைச்சர் சட்டமன்றத்தில் ஐந்து நிமிடம் பேசியதற்கு குளத்தூரில் உங்களை கொத்து புரோட்டா போட்டு விட்டார்கள் என்று கூறுகிறார்
ஐந்து நிமிடம் நீங்கள் எழுதிக் கொடுத்ததை படித்து விட்டீர்கள்
அவர்கள் எழுதிக் கொடுத்தது ஐந்து நிமிடத்தில் முடிந்து விட்டது
ஆறாவது நிமிடம் நீங்கள் எழுதிக் கொடுக்காததை படித்தால் பொதுமக்கள் உங்களை கூறு போட்டு இருப்பார்கள்
உங்களுடைய புத்திசாலித்தனத்தால் ஆறாவது நிமிடம் பேசாமல் வந்து விட்டீர்கள் ஆறாவது நிமிடம் பேசி இருந்தால் இன்று தமிழக முதலமைச்சராக எங்களுடைய தளபதி ஸ்டாலின் இருந்திருப்பார்.
கடந்த காலங்களில் 13 ஆண்டுகள் பொறுத்திருந்து நாங்கள் ஆட்சிக்கு வந்தோம் ஆகையால் ஒன்று இரண்டு ஆடுகள் எங்களால் பொறுத்து இருக்க முடியும் இருப்பினும் தற்போது எப்படி மக்கள் தற்போது மக்கள் கூடியது ஆட்சிக்கு நீங்கள் வந்தீர்களோ அதே மக்கள் புரட்சி ஏற்பட்டு உங்களை மக்களே ஆட்சியில் இருந்து தூக்கி நாங்கள் ஆட்சியில் அமர்வோம்.
மக்கள் புரட்சி ஏற்பட்டு இந்தியாவிலேயே ஆட்சி மாறிய மாநிலமாக தமிழகம் விரைவில் உருவாகும்.
நாங்கள் ஆட்சியில் இருக்கும் போது மணல் குவாரி திறப்பதற்கு நீதிமன்றம் அனுமதி அளிக்கவில்லை அதனால் நாங்கள் திறக்கவில்லை பழனி சம்பவத்தில் யாராவது தலையிடாமல் எது நடந்திருக்க முடியுமா
நினைப்பதிவாளர் துணை பதிவாளர் மாற்றம் செய்யப்படுகிறார் விடுமுறை எடுத்துக்கொண்டு போக சொல்லு அழுத்தம் கொடுக்கப்படுகிறது அதன் பின்னர் மாற்று அலுவலர் ஐந்து வருகிறார் அவர் நிலத்தை பத்திரம் பதிவு செய்கிறார்.
ஒரு நாளைக்கு மட்டும் அவர் நியமிக்கப்பட்ட இந்த பத்திரப்பதிவு நடைபெறுகிறது இதெல்லாம் ஊழலுக்கு எடுத்துக்காட்டு ஊழலுக்கு மகாசக்தியாக இந்த அரசு விளங்குகிறது.
தமிழக வெற்றி கழகத்தில் வழக்கறிஞர் அணி என்பது கிடையாது ஆனால் தற்போது புது புதிதாக ஆட்களை சேர்த்து 20 லட்சம் முதல் 50 லட்சம் ரூபாய் வரை பெற்றுக் கொண்டு அரசு வழக்கறிஞர்கள் பணி கொடுக்கப்படுகிறது.
அமைச்சராக இருப்பவர்கள் வெளிநாடு அரசு முறை பயணமாக செல்லும்போது உள்துறை அமைச்சகத்தின் அனுமதி பெற்று டிப்ளமேடிக் பாஸ்போர்ட் பெற்றுக்கொண்டு தான் செல்ல வேண்டும் ஆனால் தமிழக அரசியல் இருந்து இரண்டு அமைச்சர்கள் வெளிநாடு மத்திய அரசு உள்துறை அமைச்சகத்திற்கு சொல்லாகவே சென்றுள்ளனர் அதிலும் அதிகாரிகளும் உடன் சென்றது தான் வேடிக்கையான விஷயம் எனவே உள்துறை இந்த விஷயத்தில் நடவடிக்கை எடுக்கும் என்று நம்புகிறோம்.
ஸ்டாலின் பொறுமையானவர் என்பதும் கொள்ளை புறமாக அவர் ஆட்சி அமைக்க வரமாட்டார் என்பதும் ராஜேந்திர பாலாஜிக்கு தெரியும் அதனால் தான் அவர் அவ்வாறு கூறியுள்ளார்.




