ஏற்கனவே உயர்ந்துள்ள விலைவாசி மேலும் உயரலாம் என நிபுணர்கள் எச்சரிக்கைவிடுத்துள்ளனர்.
நமது நாட்டில் தற்போது உள்ள பணவீக்கம் அடுத்த ஆண்டும் தொடரும் என ரிசர்வ் வங்கி கணித்துள்ளது. இதனால் விலைவாசி மேலும் உயரலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக மழைப்பொழிவு அதிகரிக்கும் பட்சத்தில் காய்கறி விலைகள் உயர வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் நாடு முழுவதும் உள்ள உற்பத்தி நிறுவனங்கள் தங்கள் பொருட்களுக்கு புதிய விலையை நிர்ணயம் செய்ய வாய்ப்புள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.இலங்கை ,பாகிஸ்தானை போல இந்தியாவும் பெரிய பொருளாதார நெருக்கடியை சந்திக்குமா என்ற அச்சம் எழுந்துள்ளது.