

இந்தியாவை சேர்ந்த 75பள்ளி மாணவிகள் உருவாக்கிய செயற்கை கோள் நாளை மறுநாள் விண்ணில் பாய்கிறது.
நாடு முழுவதும் உள்ள 75 பள்ளிகளைச் சேர்ந்த 750 பள்ளிமாணவிகளால் வடிவமைக்கப்பட்ட செயற்கைக்கோளுடன் எஸ்எஸ்எல்வி ராக்கெட் தனது முதல் பயணத்தை மேற்கொள்ள உள்ளது.இஸ்ரோ அதன் சிறிய ஏவுவாகனமான செயற்கைக்கோள் எவு வாகனத்தை ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து வரும் 7ம் தேதி செலுத்த உள்ளது. நாட்டின் 75 வது சுதந்திரதினத்தையொட்டி இஸ்ரோ சார்பில் எஸ்எஸ்எல்வி ராக்கெட் விண்ணில் செலுத்தப்பட உள்ளது. அதற்கான கவுண்டவுன் ஸ்ரீஹரிகோட்டாவில் தொடங்கியுள்ளது.