பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் என்எல்சி பொறியாளர் தேர்வு குறித்து கடிதம் எழுதியுள்ளார்.
என்எல்சி பொறியாளர் பணிக்கான தேர்வில் தமிழக இளைஞர்களுக்கு முன்னுரிமை அளிக்கக்கோரி பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். என்எல்சி திட்டங்களுக்காக நிலம் வழங்கிய குடும்பத்தினர்களை சிறப்புத்தேர்வில் நியமனம் செய்ய அவர் வலியுறுத்தியுள்ளார். முன்னதாக என்எல்சி யில் பொறியாளர் பணிக்காக தேர்வு செய்யப்பட்ட 209 பேரும் வடமாநிலத்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.