• Thu. Apr 25th, 2024

ஜனாதிபதி வேட்பாளர் வெங்கைய நாயுடு?

ByA.Tamilselvan

Jun 21, 2022

16வது இந்தியக் குடியரசுத் தலைவரை தேர்வு செய்யும் தேர்தல் 18 ஜூலை 2022 அன்று நடைபெறும் என இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்நிலையில் அடுத்த ஜனாதிபதி யார் என்ற போட்டி பாஜக,மற்றும் எதிர்கட்சியினரிடையே சூடுபிடித்துள்ளது. எதிர்கட்சியனர் சார்பில் காந்தியின் பேரன் கோபாலகிருஷ்ண காந்தி,மற்றும் சரத்பவார் என பலர் ஆலோசிக்கப்பட்டுவருகிறது. இதில் இருவருமே மறுப்பு தெரிவித்து விட்டனர். இந்நிலையில் அடுத்த கட்ட ஆலோசனையில் உள்ளனர். அதேபோல பாஜக கட்சி முஸ்லிம் அல்லது பழங்குடியினத்தை சேர்ந்தவரை நிறுத்த முயற்சிப்பதாக தகவல்கள் வந்த து.
இந்நிலையில் குடியரசு துணைத்தலைவர் வெங்கைய நாயுடுவை மத்திய அமைச்சர்கள் அமித்ஷா,ராஜ்நாத்சிங்,ஜே.பி.நட்டா ஆகியோர் சந்தித்து பேசியுள்ளனர்.குடியரசுத்துணைத்தலைவர் தேர்தலுக்கான வேட்பாளரை இறுதி செய்வதற்கான பாஜக நாடாளுமன்றக் கூட்டம் இன்று மாலை நடைபெற உள்ள நிலையில் இந்தசந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. இதன் மூலம் பாஜக சார்பில் குடியரசுத்தலைவர் வேட்பாளராக வெங்கையநாயுடு நிறுத்தப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *