• Tue. May 30th, 2023

பொள்ளாச்சியில ..உள்ளாட்சி நல்லாட்சி மலரவே மலரது …சாபமிட்ட திமுக பெண் உறுப்பினர்

அமைதிப்படை சத்யராஜ் பாணியில் செயல்படும் கோவை தெற்கு மாவட்ட பொறுப்பாளர் என தெற்கு மாவட்ட மகளிர் அணி பெண் வெளியிட்டுள்ள ஆடியோ பொள்ளாச்சி திமுகவினரிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கோவை தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளராக மருத்துவர் வரதராஜன் அவர்களை சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு திமுக தலைமை அறிவித்திருந்தது, அடுத்து உள்ளாட்சித் தேர்தலில் பொள்ளாச்சி 36 வார்டுகளில் போட்டியிடும் திமுக வேட்பாளர்கள் பட்டியல் இன்று வெளியிடப்பட்டது. இந்நிலையில் தெற்கு மாவட்ட மகளிர் அணி சார்பில் தற்போது ஆடியோ ஒன்று திமுகவினரிடையே வெளியாகி உள்ளது. ஆடியோவில் கோவை தெற்கு மாவட்ட மகளிர் அணியில் இருந்து ஒரு சண்முகப்ரியா கூறியிருப்பதாவது
“கோவை தெற்கு மாவட்ட செயலாளர் அவர்களுக்கும் பொள்ளாச்சி நகர செயலாளர் அவர்களுக்கும். நகரத்தின் துணைச் செயலாளரான குறிப்பாக சொல்லப்போனால் கார்த்திகேயன் அவர்களுக்கும் வணக்கம். இதனால் தெரிவிப்பது என்னவென்றால்.
ஒரு கழகத்தில்,பணியாற்றும் பெண்கள் முதலிடம் வைக்கக்கூடாது. முகமே தெரியாத யாரென்றே தெரியாத ஆட்களை நியமிக்க வேண்டும் அவர்களை அடிமையாகி தனக்குள் கைவசம் வைத்துக்கொள்ள வேண்டும் . கூட ஒரு பத்து பேர் வைத்துக்கொண்டு பங்குகளை அளிக்க வேண்டும் நீங்கள் மட்டும் வாழ வேண்டும். இதுதான் பொள்ளாச்சி அரசியலின் இன்றைய சூழ்நிலை இது தெரியாத தலைமையில் அனைவரும் இவர்கள் அனைவரும் நல்லவர்கள் என்று நம்பி இவர்கள் கூறும் ஒவ்வொரு செயலுக்கும் சொல்லுக்கும் செவிசாய்த்து ஆணையிடுகிறார் கள்.
ஐயோ பாவம் இன்னும் போகப்போக பொள்ளாச்சி நிலை என்ன ஆகுமோ எனக்கு தெரியவில்லை. நான் எனக்கு சீட்டு கிடைக்கவில்லை என்ற ஆதங்கத்தில் பேசவில்லை மகளிர் அணிக்கு வாய்ப்பு கொடு என்று அறிவிக்கப்பட்ட தலைமையின் தளபதியார் அவர்களின் குரலுக்கு மதிப்பு இல்லை கூறியதற்காக பெயருக்கு ஒரு மகளிர் கொடுத்திருக்கிறார்கள். மீதி அனைவரும் கண்ணுக்கு தெரியாதவர்கள் நிர்வாகிகளின் மனைவிகள் இது சரியா? எனக்குத் தரவில்லை

ஓர் கண்ணுக்கே தெரியாத உங்களுக்கு சீட்டு கொடுப்பது எந்த விதத்தில் நியாயம். அடிமட்ட தொண்டன் ஆக இருந்தாலும் பரவாயில்லை உறுப்பினராக இருந்தாலும் பரவாயில்லை வேலை செய்தாலும் பரவாயில்லை வேலை செய்பவர்கள் வெளியே வரக்கூடாது. நம் மாநில மகளிர் அணி தொண்டர் அணி துணை செயலாளர் சீதா விஜயகுமார் அவர்களுக்கும் அளிக்கவில்லை காரணம் அவர்கள் இறங்கி வேலை செய்கிறார்கள், சண்முகப்பிரியா சீனிவாசன் பொள்ளாச்சி மாவட்டம் கோவை தெற்கு மாவட்ட மகளிர் அணி துணை அமைப்பாளர் ஆகிய நான் இறங்கி வேலை செய்கிறேன் நான் உங்களுக்கு தேவை வேலை செய்யாத பெண்கள்.

நீங்கள் 100 சதவீதம் சம்பாதித்தால் 10% இப்ப போட்டுருக்கும் மகளிர்களுக்கு அவர்கள் கணவர்கள் கணிக்கப்பட்டு நீங்கள் ஆட்சியில் அமர்ந்து கொண்டே இருக்க வேண்டும் இது எல்லாம் நன்றாக பார்த்துக் கொண்டே இருக்கவேண்டும். இப்பவும் சொல்றேன் எப்பவும் சொல்றேன் அதிமுக காரன் ஏன் ஜெயிச்சுட்டே இருக்கான் பொள்ளாச்சிக்கு உள்ள அப்படினா காரணம் கோஷ்டி பூசல் .

தென்றல் டீம் . வரதராஜ் ஒரு டீம் . அப்புறம் காணாம போயிட்டாரு அவர் நல்லவர் வரதராஜ டாக்டர் அவர்கள் வல்லவர் பாவம் அவர் சிறிதளவில் ஓட்டு இழந்துவிட்டார் கோவை தெற்கு மாவட்ட செயலாளராக நியமித்தற்கே நாங்கள் நன்றாக அனுபவித்து விட்டோம். ஒருவேளை ஒரு அமைச்சராக இருந்தால் சுத்த முடிஞ்சிருக்கும் இன்னொன்னு சொல்றேன் கேட்டுக்கோங்க.

என்னோட கணவருடைய அண்ணன் கொரோனாவால் அவதிப்பட்டு
லக்ஷ்மி மருத்துவமனை துடியலூர் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். அங்கு அனுமதிக்கப்பட்ட ஒரு சிபாரிசு வேணும் என்றார்கள் நான் நம் மாவட்ட செயலாளர் சாரி அன்றைய எம்எல்ஏ வேட்பாளர் நம்ம டாக்டர் இருக்கும்போது நமக்கு யார் வேண்டும் அவர் சொன்னார் சிபாரிசு செய்வார் என்று பணங்காசு கேக்கலைங்க.

ஒரு வார்த்தை ஒரு போன் பண்ணி எங்க மச்சான் கூட சரியில்ல குரல் ரொம்ப சீரியஸ் ஆயிருச்சு அட்மிஷன் போடுங்க சார் சொன்ன ஒரு வார்த்தை நீங்க கோடு சொன்னீங்க போட்டுக்குவாங்க ஆனா என்ன பண்ணார் தெரியுங்களா சரி பேசுறேன் அப்படின்னு சொல்லி போட்டு போன வைத்தவர் உங்க போனை எடுக்கலிங்க

10 லட்சம் செலவு பண்ணியும் அவரு இறந்துட்டாரு. அமைதிப்படை சத்யராஜ் அமைதிப்படை சத்யராஜ் அந்த அம்மாவாசை செயலை என் விஷயத்தில் காட்டினார் இந்த வருஷத்துல காட்டிவிட்டு அவரு இப்போ சொல்லுங்க இந்த பொள்ளாச்சியில நல்லாட்சி மலர தயவுசெய்து தலைமையில் உண்மையாகவும் நேர்மையாகவும் சமநிலையிலும் பாடுபடுகிறேன்.

சும்மா யார் வந்தாலும் சிபாரிசின் வந்தா அவங்களுக்கு பண்ணாதீங்க என்ன நான் இதுவரைக்கும் நான் மாவட்ட மகளிரணி பொறுப்பேற்று மூன்று வருஷம் ஆச்சுங்க 10 லட்சம் ரூபா செலவு பண்ணி இருக்கேன் . இன்று முகம் தெரியாத பெண்களுக்கு சீட்டுக் கொடுத்து ஏன் நான் என்ன வேண்டும் கொடுத்து விட்டேன். நான் அனைத்து மக்களையும் என் கார்ல ஆம்பல மாதிரி கூட்டிட்டு போயி
வீட்டை விட்டே வராத பொம்ளைங்கள நான் இன்னைக்கே கூட்டிட்டு வந்து நிற்க வைப்பேன். சூப்பருங்க அரசியலை நான் இப்ப சொல்றேன் பொள்ளாச்சியில உள்ளாட்சியில் நல்லாட்சி சாத்தியமா மலராது.
என அந்த பெண் திமுகவிற்கு சாபம் விடாத குறையாக தனக்கு மட்டுமின்றி தன்னை போல பல தொண்டர்களுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளதாகவும், இங்கு நடக்கும் கோஷ்டி பூசல் தான் திமுக வெற்றி பெறாமல் இருப்பதற்கு காரணம் என்றும் அந்த ஆடியோவில் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த நடவடிக்கை இப்படி தான் இருக்கும் எண்ணி திமுக கோவை திமுகவை நம்பாமல் கரூரில் இருந்து ஆட்களை இறக்கி வேலைகளை செய்து வருகிறது.ஆனாலும் அதிமுக வேட்பாளர் தேர்வில் குழப்பம் செய்ததை போலவே தற்போது திமுகவும் செய்து வருகிறது. இது அதிருப்தி ஓட்டாக மாறவும் வாய்ப்புகள் உள்ளது. இதே போன்ற ஒரு சம்பவம் தான் மதுரையிலும் அரங்கேறி உள்ளது. மாவட்ட செயலாளர்கள் சம்பாதிக்க அவர்களுக்கு ஆதரவாக பேசும் சிலரையே நியமனம் செய்கின்றனர். ஆனால் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு வரும் நிலையில் இது குறித்து திமுக தலைமை அதிருப்தியாளர்களை அழைத்து எந்தவித பேச்சு வார்த்தையும் நடத்தவில்லை என்பது திமுகவின் வெற்றி வாய்ப்பிற்கு கேள்விக்குறியை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *