பேரறிஞர் அண்ணாவின் கொள்கையை திமுக பின்பற்றுவதாக முதல்வர் ஸ்டாலின் கூறுவது கேலிக்கூத்தாக உள்ளது என அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு பேட்டி அளித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாநகர் மாவட்ட அதிமுக சார்பாக அண்ணாவின் 53 நினைவு நாளை அனுசரிக்கு விதமாக மதுரை நெல்பேட்டை சந்திப்பில் உள்ள அண்ணா சிலைக்கு முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசுகையில்,
தென்னாட்டு காந்தி என எல்லோராலும் பாராட்டப்பட்டவர் பேரறிஞர் அண்ணா. அண்ணாவின் கொள்கையை திமுக கடைபிடிக்கும் என்று முதல்வர் சொல்லி உள்ளார். திமுக அண்ணாவின் கொள்கையை கடைபிடிக்கவில்லை. அண்ணாவின் கொள்கையை கடைபிடிக்க கூடிய கட்சி அதிமுக தான். பேரறிஞர் அண்ணா திமுகவை துவங்கிய போது திராவிட முன்னேற்றக் கழகத்தில் வாரிசு அரசியல் இல்லை. பொது வாழ்வில் சிறப்பாக பணியாற்றக் கூடிய யாராக இருந்தாலும் கட்சியில் இணைந்து பணியாற்றலாம் என்றார் அண்ணா. அதன் அடிப்படையில் எம்.ஜி.ஆர் உட்பட பல தலைவர்கள் திமுகவில் உருவாகினார்கள். அண்ணாவின் மறைவுக்கு பிறகு திமுக தலைவராக இருந்த கலைஞர் அவர்கள் தனது குடும்பத்தை திமுகவில் வளர்த்தார். தற்போது முதலவராக உள்ள ஸ்டாலின் வாரிசு அரசியலை பின்பற்றி வருகிறார். ஆனால் அண்ணா தனது வளர்ப்பு மகன், மனைவியை கூட கட்சி சார்ந்த பணிகளில் ஈடுபடுத்தவில்லை. அண்ணாவின் கொள்கையை திமுக பின்பற்றும் என முதல்வர் ஸ்டாலின் கூறுவது வேடிக்கையாக, கேலிக்கூத்தாக உள்ளது.அண்ணவின் கொள்கையை 49 ஆண்டுகளாக பின்பற்று ஒரே இயக்கம் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் தான்.அண்ணாவின் புகழ் தமிழகம் முழுவது பரவி இருக்கிறது என்றால் அதற்கு எம்.ஜி.ஆர் தான் காரணம். பேரறிஞர் அண்ணாவின் புகழை அதிமுக எப்போது காக்கும் என கூறினார்.