• Sun. Sep 24th, 2023

மதத்தின் மீது கட்டமைக்கப்பட்ட அரசியல் என்பது ஆபத்தானது.- இயக்குனர் அமீர்

ByA.Tamilselvan

May 3, 2022

நடிகரும், இயக்குனருமான் அமீரின் மதுரையில் உள்ள அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசும்போது;*
பொருளியல், விஞ்ஞான மேம்பாட்டை நோக்கி வேகமாக சென்றுகொண்டிருக்கும் நிலையில் அழிவை நோக்கி சென்று கொண்டே இருக்கிறது.உலகத்தில் பல்வேறு மதத்தின் அடிப்படையில் கோட்பாடு அன்பாகவே உள்ளது. அன்புதான் தொடக்கமாக உள்ளது.சாந்தியும் சமாதானமும் தான் முக்கிய, மனித சந்தோஷத்திற்கு மனிதநேயம் தேவை.கடவுள் பெயரால் தற்போது உயிர்ப்பலி வாங்கப்படுகிறது. மதத்தின் மீது கட்டமைக்கப்பட்ட அரசியல் என்பது ஆபத்தானது.மனிதனையும் ஆன்மீகத்தையும் அரசியல் பிரித்து விட்டது.காலை முதலே இஸ்லாமியர் அல்லாத நண்பர்களான இந்து சமூகத்தை சேர்ந்தோர்கள் வாழ்த்து தெரிவித்தது மனநெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.இந்தி பேசக்கூடிய மக்கள் நல்ல மக்கள் என்றால், தமிழ், கன்னடம், தெலுங்கு பேசுபவர்கள் கேட்டவர்களா.
இந்தி தெரிந்து கொண்டால் தவறு இல்லை என்றும் .சமஸ்கிருதம் கற்றல்தான் மருத்துவம் பயிலமுடியும் என்று வகுத்ததை நீதி கட்சி, திராவிட கட்சிகள் உடைத்து எரிந்துள்ளது. தற்போது மீண்டும் தலைதொங்க பார்க்கிறது.திரைக்கலைஞர்களை திரையில் மட்டும் ரசிக்க வேண்டும். திரைகலைஞர்களை அரசியல் ரீதியாக அவர்களின் ரசிகர்களை அரசியல் கட்சிக்கு விற்றுவிடுகின்றனர்.கலைக்கு மொழி கிடையாது. அனைத்து மொழி படங்களையும் ரசிக்கலாம் .உச்ச நட்ச்த்திரம் தமிழுக்காக பேசவேண்டும் என்று எண்ணுவதே மற்றவர்களின் குரல்கள் கவனிக்கப்படுபதில்லை.ஏ ஆர் ரகுமான் போன்று உச்ச நட்சத்திரங்கள் மொழி பற்றுடன் பேச முன்வர வேண்டும்.கடந்த காலத்தில் இந்தி பாடலுக்கு இணையாக தமிழ் பாடல் நாடுமுழுவதும் கேட்க்கபட்டதற்கு காரணமாக இளையராஜா, ஏ ஆர் ரகுமான் சாதித்தார்கள்.அஜய்தேவ் தாய்மொழி இந்தியே கிடையாது, ஆனால் இந்தி குறித்து இவர்களை போன்ற உச்ச நட்சத்திரங்களை பேச வைக்கிறார்கள்.என் மொழியின் மீது மற்றொரு மொழியை திணித்தால் மொழிக்காக களத்தில் நின்று சண்டையிடுவது அவசியமாக உள்ளது என கூறினார்.

Related Post

விஸ்வகர்ம சமூக மாணவர்களின் கல்லூரி கல்வி கனவை தடுக்கும் மோடி.., இரா.முத்தரசன் கடுமையான குற்றச்சாட்டு…
ஒரே கையெழுத்தில் நீட் தேர்வு ரத்து என்னாச்சு… மது கடைகளை அடைக்க சொல்லி கருப்பு சட்டை அணிந்து நடத்திய போராட்டம் என்னாச்சு… தி.மு.க.விற்கு முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி சரமாரி கேள்வி..!
காவிரி நதிநீர் தீர்ப்பை செயல்படுத்தமல் கர்நாடக அரசு இந்திய அரசியலமைப்பு சட்டத்தை மதிக்காமல் உள்ளது. தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து இதுவரை அழைப்பு வரவில்லை – ஓபிஎஸ் பேட்டி..!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *