இந்தியாவில் கொரோனா தொற்று வரும் நிலையில், நாளை முதல்வர்களுடன் பிரதமர் ஆலோசனை.
இந்தியாவில் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வந்த நிலையில், இதனை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தது. அதன்படி கடந்த சில மாதங்களாக தொற்று பாதிப்பு குறைந்து வந்த நிலையில், தற்போது மீண்டும் அதிகரித்து வருகிறது.
இந்த நிலையில், கொரோனா அதிகரிப்பு தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் நாளை மதியம் 12 மணியளவில் மாநில முதல்வர்களுடன் காணொளி வாயிலாக ஆலோசனை மேற்கொள்ளவுள்ளார். கொரோனா தடுப்பு நடவடிக்கைகள், தடுப்பூசி செலுத்தும் பணிகள் குறித்து ஆலோசிக்கப்படவுள்ளது. இந்த கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா, மத்திய சுகாதாரத்துறை செயலர் ராஜேஷ் பூஷன் ஆகியோர் கலந்து கொள்ள உள்ளனர்.