• Wed. Apr 24th, 2024

லாக்டவுன் காலத்தில் இந்தியாவில் பல்லாயிரம் பேருக்கு எய்ட்ஸ்

இந்தியாவில் கொரோனா லாக்டவுன் சமயத்தில் பல ஆயிரம் பேருக்கு எய்ட்ஸ் பாதிப்பு ஏற்பட்டதாக ஆர்டிஐ தகவல் ஒன்று தெரிவித்துள்ளது.

இந்தியாவில் கொரோனா பாதிப்பை முன்னிட்டு மார்ச் 25ம் தேதி 2020ல் லாக்டவுன் போடப்பட்டது. அதன்பின் இரண்டு வருடம் பல்வேறு தளர்வுகளுடன் லாக்டவுன் இருந்தது.2020ல் மிக தீவிரமான கட்டுப்பாடுகளுடன் லாக்டவுன் அமலில் இருந்தது குறிப்பிடத்தக்கது. மக்கள் பலரும் இதனால் வீட்டிற்கு உள்ளேயே முடங்கினார்கள். அத்தியாவசிய பொருட்கள் வாங்க மக்கள் வெளியே போனாலும் அருகில் இருக்கும் கடைகளுக்கு மட்டுமே பலர் வெளியே சென்றனர். இதனால் மக்கள் பலர் காண்டம் இல்லாமல் பாலியல் உறவு வைத்துக்கொண்டதாக கூறப்படுகிறது.

இது தொடர்பாக மத்திய பிரதேசத்தை சேர்ந்த சந்திர சேகர் கார் என்ற நபர் ஆர்டிஐ மூலம் கேள்வி எழுப்பி இருந்தார். இதற்கு தேசிய எய்ட்ஸ் கட்டுப்பட்டு அமைப்பு பதில் அளித்துள்ளது. அதன்படி இந்தியாவில் கடந்த 2020-21 ஆண்டுகளில் மட்டும் 85268 பேருக்கு எய்ட்ஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இவர்கள் பாதுகாப்பு அற்ற பாலியல் உறவு கொண்டதாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

அதன்படி அதிகமாக மகாராஷ்டிராவில் அதிகபட்சமாக 10498 பேருக்கு எய்ட்ஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கொரோனா காலத்தில் மகாராஷ்டிராவில்தான் அதிக பேருக்கு கொரோனா ஏற்பட்டது. ஆந்திர பிரதேசத்தில் 9521 பேருக்கு எய்ட்ஸ் ஏற்பட்டுள்ளது. கர்நாடகாவில் 8947 பேருக்கு எய்ட்ஸ் ஏற்பட்டுள்ளது மத்திய பிரதேசத்தில் 3037 பேருக்கு எய்ட்ஸ் ஏற்பட்டுள்ளது. மேற்கு வங்கத்தில் 2757 பேருக்கு எய்ட்ஸ் ஏற்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் 2 ஆயிரத்திற்கும் குறைவாகவே எய்ட்ஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாம். ஆனால் அதே சமயம் 2011-12 காலத்தில் இந்தியாவில் 2.4 லட்சம் பேருக்கு எய்ட்ஸ் ஏற்பட்டுள்ளது. அதை விட இது குறைவானதுதான் என்று இந்த புள்ளி விவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2011-12 காலத்தில் 1.44 லட்சம் பேருக்கு எய்ட்ஸ் ஏற்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *