கச்சா எண்ணெய் விலை உயர்வை காரணம் காட்டி இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்படுகிறது. தற்போது, பல்வேறு மாநிலங்களில் பெட்ரோல் விலை ரூ.100-ஐ கடந்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இந்தநிலையில் கடந்த 2 நாட்களில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பெட்ரோல் ரூ.100-ஐ கடந்து விற்பனை செய்யப்பட்டது. இதனால், வாகன ஓட்டிகள் கலக்கம் அடைந்தனர். கடந்த சில தினங்களாக ஏறுமுகத்தில் பெட்ரோல், டீசல் விலை இருந்த நிலையில் இன்று விலையில் மாற்றம் எதுவும் செய்யப்படவில்லை.
அதன்படி சென்னையில் பெட்ரோல் விலை ரூ.100.01- ஆகவும், டீசல் விலை ரூ.95.31 ஆகவும் உள்ளது. பெட்ரோல்-டீசல் விலை உயர்வு வாகன ஓட்டிகளை கலக்கம் அடைய செய்திருக்கிறது.