• Sat. May 9th, 2026
WhatsAppImage2026-05-08at053925
previous arrow
next arrow
Read Now

தண்டாவளத்தில் பாறை கற்கள் சரிந்து விழுந்ததில் 2 மணி நேரம் காலதாமதம்..,

ByPuthar Pandian P

May 8, 2026

கொடைரோடு அம்பாத்துரை இடையே மலையை குடைந்து ரெயில் பாதை அமைக்கப்பட்டுள்ளன. இந்த மலை கரட்டு சுரங்க பாதையில் மழை காலங்களில் ரெயில்வே தண்டவாளத்தில் பாறை கற்கள் உருண்டு விழுந்தும் பாதிப்பு ஏற்படும்
நேற்று முன்தினம் நள்ளிரவு மலை கரட்டு பகுதியில் பலத்த மழை பெய்தது.

இதனால் பெருமாள் கோவில்பட்டி மலை கரட்டு பகுதியில் ரெயில்வே தண்டவாளத்தில் பெரும் பாறை கற்கள் சரிந்து விழுந்தது கிடந்தது. இதை பார்த்த ரெயில்வே தண்டவாளத்தில் ரோந்து செல்லும் ரெயில்வே ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர்
உடனே கொடைரோடு ரெயில்வே நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர்
அதனை தொடர்ந்து திருநெல்வேலி இருந்து சென்னை செல்லும் ரெயில் கொடைரோடு ரெயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டது

நாகர்கோவில் இருந்து கோவை ரெயிலும் தூத்துக்குடி இருந்து மேட்டுப்பாளையம் செல்லும் ரெயிலும் வாடிப்பட்டி ரெயில்வே நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டது.
2 மணி நேரம் மேல் நிறுத்தி வைக்கப்பட்டதால் பயணிகள் அவதி அடைந்தனர்.

மேலும் மலை கரட்டு பகுதியில் சரிந்து ரெயில்வே தண்டவாளத்தில் மீது விழுந்து கிடந்த பாறை கற்களை அகற்றும் பணியில் ரெயில்வே ஊழியர்கள் ஈடுபட்டனர். 2 மணி நேரம் வரை பாறை கற்களை அகற்றும் பணி நடந்தது.

அதன் பிறகு வாடிப்பட்டி கொடைரோடு ஆகிய ரெயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்ட ரெயில்கள் புறப்பட்டு சென்றது. ரெயில் வரும் நேரத்தில் பாறை கற்கள் சரிந்து விழுந்து இருந்தால் பெரும் விபத்து ஏற்பட்டு இருக்க கூடும் பெரும் ரெயில் விபத்து தவிர்க்க பட்டது.இந்த சம்பவத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது