• Wed. Apr 24th, 2024

இத்தாலியில் விமான விபத்து – பயணிகள் பலி!..

Byமதி

Oct 4, 2021

இத்தாலி நாட்டின் வடக்கே சான் டொனேட்டோ நகரில் சிறிய தனியார் விமானம் ஒன்று மிலன் லினேட் விமான நிலையத்தில் இருந்து சார்டினியா விமான நிலையத்திற்கு புறப்பட்டு சென்றது.

அந்த விமானத்தில், 2 விமானிகள் மற்றும் ஒரு குழந்தை உள்ளிட்ட 6 பயணிகள் என மொத்தம் 8 பேர் பயணம் செய்துள்ளனர். இந்நிலையில், விமானத்தின் என்ஜின் திடீரென தீப்பிடித்து எரிந்துள்ளது. அந்த விமானம் குடியிருப்புவாசிகள் யாரும் இல்லாத கட்டிம் ஒன்றின் மீது மோதி விபத்திற்குள்ளானது. இதில் விமானம் தீப்பிடித்து எரிந்தது. இந்த விபத்தில் விமானத்தில் இருந்த 8 பேரும் உயிரிழந்து உள்ளனர். தீயணைப்பு துறையினர் உடல் ஒன்றை மீட்டுள்ளனர். தொடர்ந்து மீட்பு பணி நடந்து வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *