கர்நாடகாவில் தேர்தல் பிரசாரம் செய்ய அமித்ஷா, யோகி ஆதித்யநாத்திற்கு தடை விதிக்க வேண்டும் என காங்கிரஸ் கட்சியினர் தேர்தல் ஆணையத்தில் மனு அளித்துள்ளனர்.
இந்த குழுவில் அபிஷேக் சிங்விக், பவன் குமார் பன்சால், முகுல் வாஸ்னிக் உள்ளிட்டவர்கள் இடம் பெற்றிருந்தனர். அவர்கள் அளித்த மனுவில், கர்நாடகா தேர்தலில் இருவரும் பிரசாரம் செய்த போது, சிறுபான்மையினருக்கு எதிரான கருத்துகளை கூறியதாகவும், காங்கிரஸ் மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை முன்வைத்ததாகவும் குறிப்பிட்டுள்ளனர். தொடர்ந்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரியுள்ளனர்.