மதுரை மாநகராட்சியை கண்டித்து,
மதுரை விளாங்குடி பகுதியில், பாரதிய ஜனதா கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மதுரை மாநகராட்சி உட்பட்ட விளாங்குடி பகுதியில் 1.2.20 ஆகிய பகுதிகளில் பாதாள சாக்கடை பணி முடிந்த பிறகு சாலைகளில் பள்ளம் உள்ளது சரிவரை பணி செய்யவில்லை என்று, அதேபோல் சாலை வசதி, குடிநீர் வசதி, சாக்கடை வசதி மற்றும் அடிப்படை வசதி இதுவரை அந்த பகுதியில் மாநகராட்சி சரிவர பணிகள் செய்யவில்லையாம். இது குறித்து, பலமுறை மதுரை மாநகராட்சிக்கு மனு கொடுத்தும் எந்த ஒரு நடவடிக்கை எடுக்கவில்லையாம். மதுரை மாநகராட்சி கண்டித்து, மதுரை பாரதிய ஜனதா கட்சி விளாங்குடி பகுதி சிவாஜி பட்டியல் அணி மாநில பொதுச் செயலாளர் மற்றும் வேங்கை மாறன் தலைமையில், இந்த கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில், மதுரை விளாங்குடி பாரதிய ஜனதா கட்சி அனைத்து நிர்வாகிகள் மகளிர் மற்றும் பலர் இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர். மதுரை மாநகராட்சிக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர்