தினசரி கொரோனா பாதிப்பு இந்தியாவிலேயே கேரளாவில் தான் அதிகம் என்றாலும் தற்போது சற்றே கட்டுக்குள் வந்து கொண்டு இருக்கிறது.
நேற்று அம்மாநிலத்தில் 96,835 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டு, புதிதாக 13,217 பேருக்கு தொற்று பாதிப்பு கண்டறியபட்டுள்ளது. 14,437 பேர் குணமடைந்துள்ளனர். 121 பேர் உயிரிழந்துள்ளனர். தற்போது வரை 1,41,155 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
தினசரி பாதிப்பு 15 ஆயிரத்திற்கு மேல் இருந்த நிலையில் தற்போது 15 ஆயிரத்திற்கு கீழ் குறைந்துள்ளது. இந்த நிலையில் அக்டோபர் 25-ந்தேதியில் இருந்து தியேட்டர்கள், உட்புற அரங்கங்களை கட்டுப்பாடுகளுடன் திறக்க கேரள அரசு அனுமதி அளித்துள்ளது.
தியேட்டர் மற்றும் உட்புற அரங்கங்களில் வேலைப்பார்க்கும் நபர்கள் இரண்டு கொரோனா தடுப்பூசியின் இரண்டு டோஸ்கள் செலுத்தியிருக்க வேண்டும். 50 சதவீத இருக்கைகளுடன் செயல்படலாம் என தெரிவித்துள்ளது.