• Wed. Jun 10th, 2026
WhatsAppImage2026-06-04at220632
previous arrow
next arrow
Read Now

விதவைத் தாயின் மகள்களுக்கு திருமண உதவித்தொகை வழங்கிய சமூக நல அலுவலர்..,

மதுரை மாவட்ட முத்தூட் நிதி நிறுவனம் மண்டல அலுவலக பயிற்சி மையத்தில் சமூகப் பொறுப்பு திட்டம் மூலம் மதுரை மாவட்டத்தில் விதவை தாய்மார்களின் மகள்களுக்கு திருமண உதவி திட்டத்தின் படி திருமண உதவித்தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

இந்த நிகழ்ச்சிக்கு மண்டல மேலாளர் அருண்குமார் தலைமை தாங்கினார்.
சமூகப் பொறுப்பு மேலாளர் ஜெயக்குமார் வரவேற்று திட்டம் பற்றி அறிமுக உரையாற்றினார். இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக மதுரை மாவட்டசமூக நல அலுவலர் காந்திமதி 9 விதவை தாய்மார்களின் மகள்களுக்கு திருமண உதவியாக தலா ரூ.50,000 வீதம் நிரந்தர வைப்பு காசோலைகள் வழங்கினார்.

இதில் வருவாய் திட்ட மேலாளர்நாகராஜன், மாவட்ட மேற்பார்வையாளர் ஜெயபாண்டி, விரிவாக்க நிறுவனர் இயக்குனர் இப்னுல் ஹபீஸ், மற்றும்நிதி நிறுவன மண்டல பாதுகாப்பு அலுவலர் பால் ஜெயராஜ், மண்டல வட்டார வளர்ச்சி அலுவலர்
ராஜேஷ் செல்வராஜ், மண்டல வணிக மேம்பாட்டு அதிகாரி முருகேசன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார். இதில் பல்வேறு சமூக அலுவலர்கள், தொண்டு நிறுவனத் தினர் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் மண்டல சந்தைமேலாளர் முருகானந்தம் நன்றி கூறினார்.