பசங்க2 படத்திற்குப் பிறகு நடிகர் சூர்யா, இயக்குநர் பாண்டிராஜ் இணைந்துள்ள
திரைப்படம் ’எதற்கும் துணிந்தவன்’. சூரியாவின் 40ஆவது திரைப்படமான இதை சன் pictures தயாரிக்கிறது. மேலும், சூர்யாவுக்கு ஜோடியாக பிரியங்கா மோகனும், முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் சத்யராஜ், ராஜ்கிரண், நடிகை ராதிகா உட்பட பல நடிகர்கள் நடிக்கிறார்கள். வில்லனாக வினய் நடிக்கிறார். இமான் இசையமைக்கிறார்.
சமீபத்தில் படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு நிறைவடைந்தது. இன்னும் இரண்டு பாடல்கள் மட்டும் எடுக்கப்படவுள்ளன. ஒரு பாடல் கோவாவிலும் மற்றொரு பாடல் சென்னையிலும் படமாக்க படக்குழு திட்டமிட்டுள்ளனர்.
இந்த நிலையில், இப்படத்தின் வில்லன் நடிகர் வினய் ‘டாக்டர்’ படத்திலும் வில்லனாக நடித்திருக்கிறார். ’டாக்டர்’ படத்தில் நடித்த அனுபவம் குறித்து வினய் பேசும்போது, “இந்த வருடம் எனக்கு சிறப்பாக அமைந்துள்ளது. ‘டாக்டர்’ படத்தில் நடித்தது போன்றே ‘எதற்கும் துணிந்தவன்’ படத்திலும் நடித்திருக்கிறேன். படம் வரும் டிசம்பரில் வெளியாகிறது” என்று கூறியுள்ளார்.