• Tue. Mar 25th, 2025

*துபாயில் மின்னிய மகாத்மா காந்தியின் உருவம் *

துபாய் நாட்டிலுள்ள உலகின் மிக உயரமான கட்டிடம் புர்ஜ் கலிபா. 124 மாடிகளைக் கொண்ட புர்ஜ் கலிபாவில் நட்சத்திர ஓட்டல்கள், அலுவலகங்கள், கடைகள், வர்த்தக நிறுவனங்கள், குடியிருப்புகள் மற்றும் நீச்சல் குளங்கள் என அனைத்து அம்சங்களும் இடம் பெற்றுள்ளன. இது 2,717 அடி அதாவது 828 மீட்டர் உயரம் கொண்டது.

முழுவதும் கருப்பு நிற சலவைக்கற்கள், எவர்சில்வர் மற்றும் கண்ணாடிகளால் இந்த கட்டிடம் வடிவமைக்கப்பட்டுள்ளது. 124 மாடிகளுக்கும் செல்லும் வகையில் நகரும் படிக்கட்டுகள் மற்றும் லிப்ட் வசதிகள் இங்கு உள்ளன. இந்த கட்டிடத்தை ஒட்டியுள்ள நீர்நிலையில் லேசர் ஒளிவெள்ளத்தில் இசைக்கேற்ப நடனமாடும் அழகிய நீரூற்றும் அமைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், மகாத்மா காந்தியின் 153-வது பிறந்த நாளில் அவருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் புர்ஜ் கலிபா கட்டிடத்தில் லேசர் ஒளியால் அவரது உருவம் வரையப்பட்டது. மேலும், கதர் நூற்கும் ராட்டை, அவரது பொன்மொழி ஆகியவையும் லேசர் ஒளியில் மிளிர்ந்தது.