

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் ஓய்வூதியதாரர்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மண்டல இணை இயக்குநர், கருவூலம் மற்றும் கணக்குத்துறை, (திருச்சிராப்பள்ளி) K.ரவிச்சந்திரன் தலைமையில் இன்று (21.02.2025 ) நடைபெற்றது.
இந்த ஓய்வூதியதாரர்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், ஓய்வூதியர் சங்க நிர்வாகிகள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் சுமார் 45 நபர்கள் கலந்து கொண்டு தங்கள் கோரிக்கைகளை திருச்சி மண்டல இணை இயக்குநர் மற்றும் சென்னை கருவூல கணக்கு இயக்குநரக ஓய்வூதியப்பிரிவு கணக்கு அலுவலர் ஆகியோரிடம் தெரிவித்தனர். மேலும் ஓய்வூதியதாரர்கள் கோரிக்கை தொடர்பாக 30 மனுக்கள் பெறப்பட்டு 04 மனுக்கள் தீர்வு காணப்பட்டு மீதமுள்ள 26 மனுக்கள் சம்பந்தப்பட்ட துறை அலுவலருக்கு அனுப்பி ஓய்வூதியர்களின் கோரிக்கை நிறைவேற தொடர் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என திருச்சிராப்பள்ளி மண்டல இணை இயக்குநர் அவர்கள் தெரிவித்தார்.
தொடர்ந்து, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது), ஓய்வூதியதாரர்களின் கோரிக்கைகளை கனிவுடன் பரிசீலித்து உடனுக்குடன் நிறைவேற்ற வேண்டும் என்று துறை அலுவலர்களிடம் தெரிவித்தார்.
இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) ச.வைத்தியநாதன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (கணக்குகள்) அ.காந்திமதி, மாவட்ட கருவூல அலுவலர் B.S.ஸ்ரீதர், சென்னை கருவூல கணக்கு இயக்குநரக (ஓய்வூதியப் பிரிவு) கணக்கு அலுவலர் திரு.கு.அருள் மற்றும் பல்வேறு அரசு துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

