• Tue. Sep 8th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

வெம்பக்கோட்டை செவல்பட்டி பகுதியில் பலத்த காற்றுடன் கனமழை..,

ByK Kaliraj

Jun 4, 2026

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே வெம்பக்கோட்டை செவல்பட்டி சிப்பி பாறை மைபாறை ஆகிய பகுதிகளில் நேற்று இரவு பலத்த காற்றுடன் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக பெய்த இந்த கன மழையால் இந்த பகுதியில் 20க்கும் மேற்பட்ட மின்கம்பங்கள் 40க்கும் மேற்பட்ட மரங்கள் சாலை மற்றும் தெருக்களில் சாய்ந்து சேதமடைந்தன.

இதனால் இப்பகுதியில் மின்சாரம் இல்லாமல் எட்டு மணி நேரத்திற்கு மேலாக இருளில் மூழ்கியது மின்கம்பங்கள் சாய்ந்த மரங்களை அகற்ற இப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.