• Tue. Sep 8th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெற செய்ததற்கு நன்றி தெரிவித்த கடற்கரை ராஜ்..,

ByK Kaliraj

Jun 4, 2026

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளராக போட்டியிட்ட கடற்கரை ராஜ் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

சாத்தூர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட வெம்பக்கோட்டை மேற்கு ஒன்றியத்தில் எட்டக்காபட்டி, எதிர்கோட்டை, மாதங் கோவில்பட்டி, தாயில்பட்டி, ஆலங்குளம், நதிக்குடி, குண்டாயிருப்பு, முத்துச்சாமிபுரம், கொங்கன்குளம், உள்ளிட்ட 60க்கும் மேற்பட்ட கிராமங்களில் இரண்டு நாட்கள் வாக்களித்த பொது மக்களுக்கு எம். எல் .ஏ . கடற்கரைராஜ் நேரில் சென்று பொதுமக்களிடம் தனக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெற செய்ததற்கு நன்றி தெரிவித்தார்.

நிகழ்ச்சியில் அவர் பேசியது

மதச்சார்பற்ற கூட்டணியில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளேன்.

விஜய் தலைமையிலான தமிழக அரசு விவசாய கடனை தள்ளுபடி செய்வதாக தேர்தல் வாக்குறுதி அளித்துவிட்டு தற்போது விவசாயிகளை ஏமாற்றம் அடைய செய்துள்ளார். மக்களுடைய குறைகளை நேரில் கேட்க கூட நேரம் ஒதுக்கவில்லை.. மக்களுக்கு தேவையான நலத்திட்ட உதவிகளை செய்ய முடியாமல் ஆட்சி கவிழ வாய்ப்புள்ளது . மீண்டும் திமுக கூட்டணி மாபெரும் வெற்றி பெற்று முதல்வராக ஸ்டாலின் பொறுப்பேற்பார். எனக் கூறினார்.

கிராமங்கள் தோறும் அடிப்படை தேவைகளை பொதுமக்களிடம் கேட்டறிந்து படிப்படியாக நிறைவேற்றித் தருவேன் என கூறினார். பொதுமக்கள் கொடுத்த கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டு அதற்கான பதில் அளித்தார். நிகழ்ச்சியில் வெம்பக்கோட் மேற்கு ஒன்றிய செயலாளர் ஜெயபாண்டியன்,ஜெயகணேஷ், உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் மதிமுக தேமுதிக உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.