தமிழக வெற்றிக் கழக கட்சியின் இரண்டாம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு, தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் நல் ஆசியுடன் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் வாழ்த்துக்களுடன் இன்று பெரம்பலூர் தமிழக வெற்றிக் கழகத்தின் நகர மகளிர் அணி தலைவி சங்கீதா முத்துக்குமார் தலைமையில் மாவட்டத்தில் முக்கிய பகுதிகளில் வெடி, வெடித்து ஏழை, எளிய மக்களுக்கு இனிப்புகள் வழங்கி மகிழ்ச்சியாக கொண்டாடினர்.

இந்நிகழ்வில், பெரம்பலூர் மாவட்ட துணைத்தலைவி மல்லிகா, செயலாளர் தேவ சாந்தி, துணைச் செயலாளர் தேவி பழனிச்சாமி, இணைச் செயலாளர் சத்யா, பொருளாளர் புனிதா, துணைப் பொருளாளர் அம்பிகா, இணைப் பொருளாளர் சத்யா, தமிழ்ச்செல்வி, ரூபள் சீமா, மஞ்சுளா தேவி ,நர்மதா, உட்பட தமிழக வெற்றிக்கழக கட்சியினர் பலர் பங்கேற்றனர்.
