• Mon. Apr 21st, 2025

நடத்துனர் தவறாக பேசுகிறார்- மாணவன் அமைச்சரிடம் புகார்…

ByT.Vasanthkumar

Jan 31, 2025

அரசுப் பேருந்து நிறுத்த பேருந்து நிலையத்தில் நிற்கவில்லை கேட்டால் நடத்துனர் தவறாக பேசுகிறார் மாணவன் அமைச்சரிடம் புகார் அளித்தனர்.

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் தாலுக்கா அருகே உள்ள எழுமூர் கிராமத்தில் மக்களுடன் முதல்வர் திட்டத்தை தொழிலாளர் நலன் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் சி.வி.கணேசன், போக்குவரத்து துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர், மாவட்ட ஆட்சியர் கிரேஸ் பச்சாவ் பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் மா.பிரபாகரன், எழும்பூர் கிராமத்தில் மக்களுடன் முதல்வர் திட்டத்தை முடித்துவிட்டு வெளியே வரும் போது, அந்த எழுமூர் ஏரிக்கரை சேர்ந்த ரித்திக், அதே கிராமத்தில் படித்து வரும் அரசு பள்ளி மாணவர்கள் ஒன்று சேர்ந்து, எங்கள் ஊரில் பேருந்துகள் பஸ் நிலையத்தில் நிற்காமல் செல்வதும் மற்றும் நடத்துனர் தகாத வார்த்தைகள் கூறி திட்டுகிறார்கள் என்றும் போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கரிடம் பள்ளி மாணவர்கள் கூறினார். இதனை தொடர்ந்து அமைச்சர் சிவசங்கர் உடனடியாக அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், இனிமேல் பேருந்துகள் பஸ் நிறுத்தத்தில் நிறுத்தப்படும் என்றும் உறுதி அளித்து உத்தரவு செய்து அங்கு இருந்து சென்றார்.