



கடலூர் மாவட்டம் திட்டக்குடியில் அமைந்துள்ள அருள்மிகு அசனாம்பிகை அம்மன் உடனுறை வைத்தியநாத ஸ்வாமி திருக்கோயிலில் ஆண்டு தோறும் பங்குனி உத்திர திருவிழா 11 நாட்கள் நடைபெறும் இதுபோல் இந்த ஆண்டு 1/4/24 அன்று தொடங்கிய திருவிழா.

தினசரி காலை மாலை இரு வேலைகளின் பால்,தயிர்,பன்னீர், அரிசி மாவு திரவிய பொடி மஞ்சள் பஞ்சாமிர்தம் விபூதி போன்ற 14 வகையான பொருட்களால் அபிஷேகம் செய்து தினசரி பல்லாக்கு, கற்பக விருட்சக வாகனம், பூத வாகனம்,கைலாய வாகனம், ரிஷப வாகனத்தில் நான்கு மாத வீதியாக திருவீதி உலா வளம் வரும் கடந்த ஏழாம் நாள் திருவிழா திருக்கல்யாணம் மிகவும் சீரும் சிறப்புமாக நடைபெற்றது.

தொடர்ச்சியாக இன்று விநாயகர், வைத்தியநாத சுவாமி, அசனாம்பிகை அம்மன் மூன்று தேர்களில் வீதி உலா வந்தது இந்த நிகழ்ச்சியில் சிவனடியார்கள், நன்கொடையாளர்கள், இந்து சமய நலத்துறை அதிகாரிகள், முக்கியஸ்தர்கள் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்துடு அரோகரா கோஷம் எழுப்பினர். தேடி வடம் பிடித்து இழுத்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். இந்த நிகழ்ச்சிக்கு டிஎஸ்பி மோகன் தலைமையில், 150 க்கு மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

