• Mon. Apr 28th, 2025

மோட்டார் சைக்கிள் திருடிய வாலிபர் கைது..,

ByArul Krishnan

Apr 10, 2025

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே சின்னபண்டாரகுப்பம் கிராமத்தைச் சேர்ந்த ரமேஷ் மகன் பிரதீஷ் வயது 22 இவர் வீட்டில் நேற்று முன்தினம் இரவு மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு தூங்கியுள்ளனர்.

அப்பொழுது இரண்டு மர்ம நபர்கள் மோட்டார் சைக்கிளை திருடி சென்றது. அவருடைய தாய் கண்டு கூச்சலிட்டார். பின்னர் பிரதீஷ் மற்றும் அவர் தந்தை ரமேஷ் இரண்டு பேரும் மற்றொரு வண்டியில் அந்த வாலிபரை விரட்டிச் செல்லும் பொழுது அந்த வாலிபர் ரமேஷை தாக்கி தப்பி ஓடினார்.

பின்னர் இரவு முழுவதும் அப்பகுதி கிராம மக்கள் தேடி வந்தனர். பின்னர் ஒரு வாலிபரை முந்திரி தோப்பில் இருந்து வெளியே வந்தவரை கிராம மக்கள் பிடித்தனர். பின்னர் அவரை விருத்தாசலம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். விருத்தாசலம் போலீசார் விசாரணை செய்ததில் காஞ்சிபுரம் மாவட்டம் பாஞ்சாலம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த வீரமணி மகன் அருண் வயது 19 என்பது தெரிய வந்தது இவர் சின்னபண்டாரகுப்பம் கிராமத்தில் வீட்டில் நிறுத்தி வைத்திருந்த மோட்டார் சைக்கிள் திருடியது தெரிய வந்தது.

பின்னர் போலீசார் வழக்கு பதிவு செய்து அருணை கைது செய்தனர். இவர் மீது விழுப்புரம் காவல்நிலத்தில் மோட்டார் சைக்கிள் திருட்டு வழக்கு உள்ளது என குறிப்பிடத்தக்கது.