• Thu. Apr 25th, 2024

தென்காசி ஆயக்குடி அமர்சேவா சங்கத்திற்கு பத்மஸ்ரீ விருது

தென்காசி மாவட்டம் ஆயக்குடியில் உள்ள அமர்சேவா சங்கத்தில் குடியரசுத் தலைவர் பத்மஸ்ரீ விருது வழங்கினார்.தென்காசி மாவட்டம் ஆயக்குடியில் இயங்கிவரும் அமர்சேவா சங்கம்.இந்த மையத்தில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் மனநலம் பாதிக்கப்பட்ட உடல் ஊனமுற்றவர்கள் ஏராளமானோர் தங்கி பயின்று வருகின்றனர்

அவர்களுக்கு தனித்தனியாக சிறப்பு வகுப்புகள் மற்றும் கைத்தொழில் மற்றும் கணினி பயிற்சிகள் ஆகியவற்றை சிறப்பாக வழங்கி வருகின்றனர். அமர் சேவா சங்கத்தின் நிறுவனர் எஸ். ராமகிருஷ்ணன் 1981 ஆம் வருடம் அமர் சேவா சங்கத்தைத் தொடங்கி, கடந்த 38 வருடங்களாக பல்வேறு பணிகளைச் செய்து வருகிறார். மாற்றுத்திறனாளிகள் இந்த சமுதாயத்தில் ஒருங்கிணைந்து வாழ மறுவாழ்வுப் பணிகளைச் செயல்படுத்தி வருகிறார்.

1975 ஜனவரி 10ம் தேதியன்று நடந்த கடற்படைக்கான தகுதித் தேர்வின்போது ஏற்பட்ட விபத்தினால் முதுகுத் தண்டுவடம் பாதிக்கப்பட்ட அவர், தன்னைப் போன்ற மாற்றுத் திறனாளிகள் சிரமங்களைப் போக்க எண்ணி சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை உள்ள மாற்றுத் திறனாளிகள் அனைவருக்குமான பணிகளை மேற்கொண்டு, அவர்களுக்கு உணவு, உறைவிடம், கல்வி, தொழிற்பயிற்சி, உடலியக்கப் பயிற்சிகள் போன்ற அடிப்படைத் தேவைகள் அனைத்தும் வழங்க ஆவன செய்து வருகிறார்.மேலும்

பல்வேறு அமைப்புகள் சார்பாகவும் பொது மக்களின் சார்பாகவும் பல்வேறு நலத்திட்டங்கள் மற்றும் குருநாதர் தடுப்பு நடவடிக்கைகளையும் செய்து வந்த இந்த சங்கத்திற்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இன்று பத்மஸ்ரீ விருதினை டெல்லியில் வழங்கினார். இந்த விருதினை அமர் சேவா சங்க ஒருங்கிணைப்பாளர் ராமகிருஷ்ணன் பெற்றுக்கொண்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *