

சென்னையில் தொடர்ந்து பெய்துவரும் கனமழையால், சென்னையில் அதிகபட்சமாக 6 செமீ, புழல் பகுதியில் 4 செமீ, வில்லிவாக்கம் பகுதியில் 5 செமீ மழைப்பதிவாகி இருப்பதாகவும், நந்தனம், அண்ணா பல்கலைக்கழகம், மேற்கு தாம்பரத்தில் தலா 4 செமீ மழைப்பதிவாகி இருப்பதாகவும் வானிலை மையம் தெரிவித்திருக்கிறது.
இந்த நிலையில், அதி கனமழை காரணமாக வெளிமாநிலங்களில் இருந்து கோயம்பேடு சந்தைக்கு தக்காளி வரத்து குறைந்துள்ளதால் விலை அதிகரித்துள்ளதாக வியாபாரிகள் கூறுகின்றனர். அதே போல், வெங்காயம், கேரட், அவரைக்காய், முருங்கைக்காய், முருங்கை விலையும் கணிசமாக அதிகரித்துள்ளது. நேற்று ஒரு கிலோ வெங்காயம் 50 ரூபாய்க்கு விற்கப்பட்ட நிலையில் இன்று 60 ரூபாய் என விலை அதிகரித்துள்ளது. கேரட் நிலை விலையும் கிலோ 120 என விற்கப்படுகிறது. அதீத கனமழையால் வீட்டில் பொதுமக்கள் முடங்கியுள்ள நிலையில் அத்தியாவசிய காய்கறிகளின் விலை ஏற்றம் பொது மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என சொல்லப்படுகிறது அதே நேரத்தில் வரத்து குறைவால் காய்கறிகளின் விலை அதிகரித்துள்ளதாக வியாபாரிகள் கூறுகின்றனர்.
