• Sun. Aug 9th, 2026
WhatsAppImage2026-08-06at2018242
previous arrow
next arrow
Read Now

நம்பியூர் வட்டார சிஐடியு சங்கம் சார்பில்
அரசு போக்குவரத்து பணிமனை முன்பு தர்ணா

ஈரோடு மாவட்டம் நம்பியூர் அரசு போக்குவரத்து கழக ஊழியர் சங்கம் சிஐடியு சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தர்ணா போராட்டம் நடைபெற்றது.
நம்பியூர் அரசு போக்குவரத்து கழக பணிமனை முன்பு நடைபெற்ற தர்ணா போராட்டத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நம்பியூர் சிஐடியு கிளை தலைவர் சண்முகம் பேசினார்.

அப்போது 14வது ஊதிய ஒப்பந்த கோரிக்கையை உடனடியாக அமல்படுத்த வேண்டும், ஓய்வு பெற்ற பணியாளர்களுக்கு பணப்பலன்களை விரைவாக கொடுக்க வேண்டும், நிலுவையில் உள்ள உள்ள டிஏவை உடனடியாக வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் குறித்து பேசினார்.