• Wed. Jun 17th, 2026
WhatsAppImage2026-06-04at220632
previous arrow
next arrow
Read Now

நம்பியூரில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்

ஈரோடு மாவட்டம் நம்பியூர் வட்டார தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நம்பியூர் வட்டாட்சியர் அலுவலகம் நம்பியூர் பேரூராட்சி அலுவலகம் நம்பியூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் ஆகிய இடங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்ற நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு நம்பியூர் வட்டார தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத் தலைவர் மகாலிங்கம் தலைமை தாங்கினார்.அதில் இளைஞர்களின் வேலைவாய்ப்பை பறிக்கும்அரசாணை 115 ரத்து செய்ய வேண்டும், புதிய மருத்துவ காப்பீடு திட்டத்தில் உள்ள குளறுபடிகளை கலைந்து உரிய காப்பீட்டு தொகையை வழங்கிட வேண்டும், சிபிஎஸ் திட்டத்தை ரத்து செய்து பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும், இந்த கோரிக்கைகளை நிறைவேற்றிட தவறும் பட்சத்தில் பட்ஜெட் கூட்டத்தொடரின் போது சட்டமன்ற முற்றுகையிடுவதென தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.