• Thu. Apr 25th, 2024

வடகொரியா ஏவுகணைகளை சோதனை – தென்கொரியா, ஜப்பானில் பதட்டம்

ByA.Tamilselvan

Nov 3, 2022

வடகொரியா தொடர்ந்து ஏவுகணை சோதனை தென்கொரியா,ஜப்பானில் அவசரகால எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வடகொரியா இந்த ஆண்டு தொடக்கம் முதலே ஏவுகணை சோதனை அடிக்கடி நடத்தி வருகிறது. இதற்கு தென் கொரியா, அமெரிக்கா, ஜப்பான் ஆகிய நாடுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தாலும் அதை கண்டு கொள்ளாமல் வடகொரியா தொடர்ந்து ஏவுகணை சோதனை நடத்துகிறது. இதற்கிடையே தென் கொரியா- அமெரிக்கா இணைந்து போர் பயிற்சி செய்வதற்கு மிரட்டல்விடும் வகையில் நேற்று ஒரே நாளில் 23 ஏவுகணைகளை வீசி வட கொரியா சோதனை நடத்தியது. தென் கொரியா எல்லையை நோக்கி வீசப்பட்ட ஏவு கணைகளில் ஒன்று தென் கொரியாவின் சோக்கோ நகர் அருகே விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. அதே போல வடகொரியா வீசிய ஒரு ஏவுகணை ஜப்பான் கடல் எல்லையை கடந்து பசிபிக் கடலில் விழுந்தது.
வடகொரியா தொடர்ந்து ஏவுகணை வீசி வருவதால் தென்கொரியா, ஜப்பானில் மக்களுக்கு அவசரகால எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *