

பிஜேபியின் முக்கிய பொறுப்பிலிருந்து மத்திய அமைச்சர் நிதின்கட்கரி நீக்கப்பட்டுள்ளார்.பாரதியஜனதா கட்சியின் உயர்நிலை கொள்கை வகுக்கும் அமைப்பான பார்லிமெண்டரி போர்டிலிருந்து மத்திய அமைச்சர் நிதின்கட்கரி நீக்கப்பட்டுள்ளார். மத்தியப் பிரதேச முதலமைச்சர் சிவராஜ்செளகானும் நீக்கப்பட்டிருக்கிறார்.புதிய உறுப்பினர்களாக கர்நாடக முன்னாள் முதலமைச்சர் எடியூரப்பா,சர்பானந்தசோனாவால் ,கே.லட்சுமண் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர். நட்டா தலைமையிலான இந்த குழுவில் பிரதமர் மோடி, அமித்ஷா ,ராஜ்நாத்சிங் உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர்.
