• Sat. May 2nd, 2026
WhatsAppImage2026-04-23at013527
previous arrow
next arrow
Read Now

ஓபிஎஸ் தலைமையில் அதிமுக மிக எழுச்சியோடு செயல்படும் – கோபாலகிருஷ்ணன் எம்பி பேட்டி

ByA.Tamilselvan

Aug 17, 2022

அதிமுக ஓபிஎஸ் தலைமையில் மிக எழுச்சியோடு செயல்படும் என முன்னாள் எம்.பி.கோபாலகிருஷ்ணன் பேட்டி.
பொதுக்குழுவுக்கு எதிரான வழக்கின் தீர்ப்பு ஓபிஎஸ்க்கு சாதகமாக வந்துள்ள நிலையில் மதுரையில் ஓபிஎஸ் ஆதரவாளர் முன்னாள் எம்.பி கோபாலகிருஷ்ணன் தலைமையில் அதிமுக தொண்டர்கள் ஊர்வலமாக சென்று எம்.ஜி.ஆர், ஜெயலலிதா சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். மேலும் இனிப்பு வழங்கி தீர்ப்பினை கொண்டாடினர்.அப்போது செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் எம்.பி கோபாலகிருஷ்ணன் பேசும் போது
பொதுக்குழு செல்லாது என்ற தீர்ப்பை புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர்,புரட்சிதலைவி ஜெயலலிதாவின் ஆன்மாவின் வழிகாட்டுதுலாக எடுத்துக்கொள்ளவேண்டும். அதிமுகவின் அடுத்த கட்ட நகர்வாக ஓபிஸ் தலைமையில் எழுச்சியோடு செயல்படும். ஓபிஎஸ், இபிஎஸ் யார் தலைமையில் செயல்படுவது என்பது குறித்து தொண்டர்களின் நலன் கருதி தலைமை முடிவு எடுக்கும்.அதிமுக தொண்டர்களுக்கான இயக்கம் தொண்டர்களால் வழிநடத்தப்படகூடிய இயக்கம்
என்பதை நீதிமன்றம் தெளிவாக எடுத்துக்காட்டியிருக்கிறது.புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர்,புரட்சிதலைவி ஜெயலலிதாவின் ஆன்மாவின் வழிகாட்டுதுலாக நீதிக்கு தலை வணங்குகிறோம்.ஓபிஎஸ்,இபிஎஸ் இணைந்து செயல்படுவதை காலம் ஏற்படுத்திக்கொடுக்கும்.மதுரைமாநகர், புறநகர் அதிமுக சார்பாக .நீதிமன்றம் கொடுத்த தீர்ப்பை தொண்டர்களின் வெற்றியாக கொண்டாடுகிறோம்.ஒன்னரைகோடி தொண்டர்களின் எண்ண ஒட்டத்தை இந்த தீர்ப்பின் மூலமாக நீதியரசர் வெளிப்படுத்தியிருக்கிறார் என்றார் அவர்.