• Fri. Mar 29th, 2024

கடற்கரைகளில் புத்தாண்டு கொண்டாட அனுமதி இல்லை – தமிழக அரசு

Byமதி

Dec 14, 2021

டிசம்பர் 31 ஆம் தேதி வரை தமிழ்நாட்டில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், ”தமிழ்நாட்டில் கொரோனா நோய் தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் 15-12-2021 வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நடைமுறையில் இருந்து வருகிறது. பண்டிகைக் காலங்களில் கொரோனா நோய் தொற்று பரவலை கட்டுப்படுத்த எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் தற்போது அண்டை மாநிலங்களில் பரவிவரும் உருமாறிய கொரோனா- ஒமிக்ரான் வைரஸ் நோயை கருத்தில் கொண்டும் தடுப்பூசி செலுத்தும் பணியினை விரைவுப்படுத்தவும், தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

பண்டிகைக் காலங்களில் பொதுமக்கள் ஒரே நேரத்தில் ஒரே இடத்தில் கூட்டம் கூடுவதால் கொரோனா நோய்த் தொற்று பரவல் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக, மருத்துவ வல்லுநர்கள் தெரிவித்துள்ளதைக் கருத்தில் கொண்டு, பொது மக்கள் நலன்கருதி பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றன” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

கட்டுப்பாடுகள்:

  • சமுதாய, கலாச்சார, அரசியல் கூட்டங்கள் போன்ற பொது மக்கள் கூடும் நிகழ்வுகளுக்கு தற்போது நடைமுறையிலுள்ள தடை தொடரும்.
  • கொரோனா நோய் தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில், 31-12-2021 மற்றும் 1-1-2022 ஆகிய நாட்களில் அனைத்து கடற்கரைகளிலும் பொதுமக்களுக்கு அனுமதியில்லை.
  • ஏற்கனவே அனுமதிக்கப்பட்டுள்ள செயல்பாடுகள் உரிய கட்டுப்பாடுகளுடன் தொடர்ந்து அனுமதிக்கப்படும்.

தளர்வுகள்:

  • அனைத்து நீச்சல் குளங்களும் செயல்பட அனுமதிக்கப்படும்.
  • அனுமதிக்கப்பட்ட செயல்பாடுகள் அனைத்திற்கும் கூட்ட அரங்குகள் பயன்படுத்த அனுமதிக்கப்படும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *