அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டம் அக்டோபர் 16ஆம் தேதி நடைபெறபோவதாக அறிவிப்பு வெளியானது…
தற்போது இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவராக உள்ளார் ராகுல் காந்தி. இந்த கூட்டத்தில் கட்சியின் புதிய தலைவரை தேர்ந்தெடுக்கும் பணி நடைபெறுமென தெரிகிறது…மேலும் அடுத்த ஆண்டு பல மாநிலங்களில் நடைபெறவிருக்கும் சட்டப்பேரவை தேர்தல் குறித்தும் தற்போதய அரசியல் சூழல் குறித்தும் ஆலோசனை நடைபெறவுள்ளதாக தெரிகிறது…இக்கூட்டதில் சோனியாகாந்தி, ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி உட்பட கட்சி உறுப்பினர்களும் பங்கேற்பார்கள் என்று தெரிய வந்துள்ளது.