• Fri. Sep 4th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

ஜப்பான் பிரதமருக்கு வாழ்த்து கூறிய மோடி..

Byகாயத்ரி

Oct 9, 2021

பிரதமர் நரேந்திர மோடி நேற்று தொலைபேசி வாயிலாக ஜப்பான் நாட்டின் புதிய பிரதமர் புமியோ கிஷிடாவிடம் பேசினார்.

கிழக்காசிய நாடான ஜப்பான் பிரதமராக புமியோ கிஷிடா சமீபத்தில் பதவியேற்றார். இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி அவரிடம் தொலைபேசியில் பேசினார்.

இதுகுறித்து, ‘டுவிட்டர்’ பதிவில் மோடி கூறியிருப்பதாவது:ஜப்பான் பிரதமர் கிஷிடாவுக்கு வாழ்த்து கூறினேன். மேலும், இந்தோ – பசிபிக் பிராந்தியத்தில் இரு நாடுகளும் இணைந்து பணியாற்றவும், ஒத்துழைப்பை மேம்படுத்தவும் விருப்பத்தை தெரிவித்தேன் என்று பிரதமர் மோடி அவரது டுவிட்டரில் கூறியுள்ளார்.