விருதுநகர் மேற்கு மாவட்டத்தில் கழக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் விருதுநகர் மேற்கு மாவட்ட கழக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான கே.டி.ராஜேந்திரபாலாஜியின் பரிந்துரையின் பேரில் புதிய நிர்வாகிகளை நியமனம் செய்துள்ளனர்.

அதன்படி மாநில எம்.ஜி.ஆர் இளைஞர் அணி துணைச் செயலாளராக சாத்தூர் முன்னாள் எம்எல்ஏ எம்.எஸ்.ஆர்.ராஜவர்மன், மாநில அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்ற துணைச் செயலாளராக வேண்டுராயபுரம் சுப்பிரமணி நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதே போன்று சிவகாசி வடக்கு ஒன்றியக் கழக செயலாளராக புதுப்பட்டி கருப்பசாமி, சிவகாசி தெற்கு ஒன்றிய கழக செயலாளராக ஆனையூர் ஊராட்சி மன்ற தலைவர் லட்சுமிநாராயணன், சிவகாசி கிழக்கு ஒன்றிய கழக செயலாளராக விஸ்வநத்தம் ஆரோக்கியம், சிவகாசிமேற்கு ஒன்றிய செயலாளராக தேவர்குளம் வெங்கடேஷ், இராஜபாளையம் வடக்கு நகரக் கழக நகரச் செயலாளராக துரைமுருகேசன், இராஜபாளையம் தெற்கு நகரக் கழக செயலாளராக பரமசிவம், ஸ்ரீவில்லிபுத்தூர் நகரக் கழக செயலாளராக முன்னாள் அமைச்சர் இன்பத்தமிழன், விருதுநகர் வடக்கு ஒன்றியக் கழக செயலாளராக மச்சராஜா, ஸ்ரீவில்லிபுத்தூர் வடக்கு ஒன்றியக் கழக செயலாளராக திருவில்லிபுத்தூர் எம்எல்ஏ மான்ராஜ், விருதுநகர் மேற்கு மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற மாவட்டத் தலைவராக பாலகுரு, மாவட்ட இணைச் செயலாளராக பாலசுப்பிரமணியம், மாவட்ட துணைச் செயலாளர்களாக ஈஞ்சார் கூடலிங்கபாண்டியன், ரிசர்வ்லயன் முனியசாமி, ராஜபாளையம் குருசாமி, திருத்தங்கல். பாலமுருகன், ராஜபாளையம் கராத்தே ஆறுமுகம், விருதுநகர் மேற்கு மாவட்ட புரட்சித் தலைவி அம்மா பேரவை மாவட்ட துணைத் தலைவராக திருப்பதி, மாவட்டப் பொருளாளராக ரஜித்பாலாஜி, விருதுநகர் மேற்கு மாவட்ட எம்.ஜி.ஆர் இளைஞர் அணி செயலாளராக பலராம்,
விருதுநகர் மேற்கு மாவட்ட மாணவர் அணி மாவட்ட துணைச் செயலாளராக தங்கராஜ், விருதுநகர் மேற்கு மாவட்ட அண்ணா தொழிற்சங்கம் மாவட்டத் தலைவராக மகேஸ்வரன், விருதுநகர் மேற்கு மாவட்ட வழக்கறிஞர் பிரிவு மாவட்ட துணைச் செயலாளராக சுக்கிரவார்பட்டி செந்தில்குமார், விருதுநகர் மேற்கு மாவட்ட விவசாயப் பிரிவு மாவட்டச் செயலாளராக முத்தையா, விருதுநகர் மேற்கு மாவட்ட இலக்கிய அணி மாவட்டச் செயலாளராக தெய்வம், மாவட்ட துணைச் செயலாளராக விஷ்ணுபாண்டி, விருதுநகர் மேற்கு மாவட்ட தகவல் தொழில்நுட்பப் பிரிவு மாவட்ட இணைச் செயலாளராக மணிகண்டன், விருதுநகர் ஒன்றிய இணைச் செயலாளராக நாகலட்சுமி, விருதுநகர் மேற்கு மாவட்ட வர்த்தக அணி மாவட்டச் செயலாளராக முருகன், விருதுநகர் வடக்கு ஒன்றிய இளைஞர் பாசறை, இளம் பெண்கள் பாசறை செயலாளராக அசோக்குமார், இராஜபாளையம் தெற்கு ஒன்றிய புரட்சித் தலைவி அம்மா பேரவை செயலாளராக ஜான்சன், திருத்தங்கல் நகரக் கழகம் பொருளாளராக கருப்பசாமி, திருத்தங்கல் நகர இலக்கிய அணி செயலாளராக பிரசாந்த், மம்சாபுரம் பேரூராட்சிக் கழக செயலாளராக ராஜேஸ்குமார், பேரூராட்சி துணைச் செயலாளராக வேல்முருகன், மம்சாபுரம் பேரூராட்சி புரட்சித் தலைவி அம்மா பேரவை செயலாளராக தனசேகர், மம்சாபுரம் பேரூராட்சி எம்.ஜி.ஆர்.இளைஞர் அணி பேரூராட்சி செயலாளராக ஜெயச்சந்திரன், மம்சாபுரம் பேரூராட்சி சிறுபான்மையினர் நலப் பிரிவு செயலாளராக ரஞ்சித்குமார், மம்சாபுரம் பேரூராட்சி விவசாயப் பிரிவு செயலாளராக நாகராஜன், மம்சாபுரம் பேரூராட்சி இலக்கிய அணி செயலாளராக கணேசன், மம்சாபுரம் பேரூராட்சி இளைஞர் பாசறை, இளம் பெண்கள் பாசறை செயலாளராக எடிசன், மம்சாபுரம் பேரூராட்சி தகவல் தொழில்நுட்பப் பிரிவு செயலாளராக சந்தனம், சேத்தூர் பேரூராட்சி எம்.ஜி.ஆர். மன்றம் செயலாளராக சண்முகராஜ் நியமிக்கப்பட்டுள்ளனர். புதிய நிர்வாகிகள் முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜியை நேரில் சந்தித்து சால்வை அணிவித்து வாழ்த்து பெற்றனர்.

