• Thu. Apr 18th, 2024

புதிய கல்வி கொள்கை சுதந்திரத்தை அளிக்கிறது -மோடி பேச்சு

ByA.Tamilselvan

Jul 29, 2022

புதிய கல்விக்கு கொள்கை இளைஞர்களுக்கு சுதந்திரத்தை அளிக்கிறது அண்ணாபல்கலைபட்டமளிப்பு விழாவில் பிரதமர் மோடி பேச்சு
அண்ணா பல்கலைக்கழகத்தின் 42-வது பட்டமளிப்பு விழாவில் பிரதமர் மோடி பங்கேற்றார். இதில், பொறியியல் படிப்புகளில் முதலிடம் பிடித்த மாணவர்கள், மாணவிகள் 69 பேருக்கு தங்கப்பதக்கம், பட்டங்களை பிரதமர் மோடி வழங்கினார்.
இதைத் தொடர்ந்து மோடி பேசியதாவது; “மாணவர்களின் கனவை நிறைவேற்றும் ஆசிரியர்களுக்கு எனது நன்றிகள். நீங்கள் தான் தேசத்தை கட்டமைப்பவர்கள்; நாளைய தலைவர்கள். மாணவர்களின் சாதனையை கொண்டாடுவதற்கு இங்கு கூடியுள்ளோம்.ஒட்டுமொத்த உலக நாடுகளும் இந்தியாவை உற்று நோக்குகின்றன. 125 ஆண்டுக்கு முன்பு சுவாமி விவேகானந்தர் சென்னைக்கு வந்துள்ளார். இளைஞர்கள் தான் வளர்ச்சியின் இன்ஜின்கள். உலகத்தின் வளர்ச்சியின் இன்ஜினாக இந்தியா உள்ளது.உலகத்தில், செல்போன் உற்பத்தியில் இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது. கோவிட் பெருந்தொற்றை இந்தியா மிகச்சிறப்பாக எதிர்கொண்டு வாகை சூடியது.
பாரத ரத்னா அப்துல் கலாம் அண்ணா பல்கலைக்கழகத்துடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தார். அவர் தங்கியிருந்த அறை நினைவகமாக மாற்றப்பட்டுள்ளது.கடந்த 6 ஆண்டுகளில் இந்தியாவில் புத்தொழில் நிறுவனங்கள் 15 ஆயிரமாக அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு வரலாற்று சாதனையாக 83 பில்லியன் டாலர் முதலீட்டை இந்தியா ஈர்த்துள்ளது. சர்வதேச உணவு சங்கிலியில் இந்தியாவின் பங்களிப்பு மிகவும் முக்கியம்.உக்ரைன் போரால் உலகம் நெருக்கடியை சந்தித்த போது, இந்தியா உணவு தானிய உற்பத்தியை அதிகரித்தது. பள்ளிக்குழந்தைகள், இல்லத்தரசிகள், சிறு வியாபாரிகள் டிஜிட்டல் தொழில்நுட்பத்தை கையாளுகின்றனர். உலக அளவில் டிஜிட்டல் பரிவர்த்தனையில் இந்தியா முதலிடம் வகிக்கிறது.இந்திய இளைஞர்களை வரவேற்க உலகளவில் நிறுவனங்கள் தயாராக உள்ளன. முந்தைய காலங்களில் ஒரே இடத்தில் பணிபுரிந்து மாத சம்பளம் பெறுவதில் ஆர்வம் கொண்டிருந்தனர்.கதிசக்தி போன்ற திட்டங்கள் , நாட்டின் உட்கட்டமைப்பு மேம்பாட்டில் பெரிய அளவில் மாற்றங்களை கொண்டு வருகின்றன. புதிய கல்வி கொள்கை, இளைஞர்களுக்கு பெரிய அளவில் சுதந்திரத்தை அளிக்கிறது” என்று பிரதமர் மோடி பேசினார்.
இந்த விழாவில், கவர்னர் ரவி, முதல்வர் ஸ்டாலின், உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, மத்திய இணையமைச்சர் முருகன், துணைவேந்தர், மாநில அமைச்சர்கள், உயர்கல்வித்துறை செயலர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *