• Wed. Sep 9th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

அதிரடியாய் சம்பளத்தை உயர்த்திய நயன்தாரா..

நடிகை நயன்தாரா தற்போது தமிழ், தெலுங்கு, ஹிந்தி என இந்திய மொழிகளில் முக்கிய நடிகர்களுடன் நடித்து வருகிறார்.

தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் நயன்தாரா, தமிழ் சினிமாவில் பல கோடிகளில் சம்பளம் வாங்கி வருகிறார்..

முதலில் தமிழில் நான்கு கோடி சம்பளம் வாங்கிய நயன்தாரா தற்போது இந்தியில் ஷாருக்கானுடன் ஜோடி சேர்ந்து நடிப்பதால் தற்போது தனது சம்பளத்தை இருமடங்காக இன்னும் சொல்லப்போனால்,இரு மடங்கை விட அதிகமாக உயர்த்தியுள்ளதாக கூறப்படுகிறது.

அட்லியின் உதவியாளர் இயக்கும் ஒரு புதிய படத்திற்கு நயன்தாரா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளாராம். இந்த படத்தை ட்ரேடியன்ட் ஆர்ட்ஸ் பட நிறுவனம் சார்பாக ரவீந்திரன் தயாரிக்க உள்ளாராம். இந்த படத்திற்காக நயன்தாரா 10 கோடி சம்பளம் கேட்டு உள்ளாராம். 10 கோடி கொடுத்தால் ஓகே. இல்லையென்றால் வேண்டாம் என்று கூறி வருகிறாராம்.

இந்த சம்பளத்தை கொடுக்க தயாரிப்பு தரப்பு சம்மதிப்பதாக கூறப்படுகிறது. இப்படம் கதாநாயகியை முதன்மையாக வைத்து எடுக்கப்படும் திரைப்படமாகும். விரைவில் இப்படத்தின் அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.