ரஜினி ரசிகர் மன்றத்தை சுமார் 40 ஆண்டுகளுக்கு முன் நிறுவியவர் முத்துமணி என்பவர். இவர் முதன் முதலில் மதுரையில் ரசிகர் மன்றத்தைத் தொடங்கிய பின் இது தற்போது தமிழகம் முழுவதும் பரவியுள்ளது.
இதனால் தனக்கு முதல் ரசிகர் மன்றத்தை நிறுவிய முத்துமணி மீது அன்புகொண்டு அவரிடம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தொலைபேசியில் உரையாடுவது வழக்கம்.
இந்நிலையில், முத்துமணி இன்று காலமானதாக தகவல் வெளியாகி உள்ளது. இது ரஜினிகாந்த் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.