• Wed. Sep 9th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

இதுக்கு தனுஷ் தான் காரணம் – மாளவிகா மோஹனன்

தற்போது நடிகர் தனுஷ் நடிப்பில் மாறன் திரைப்படம் வெளியாக உள்ளது. கார்த்திக் நரேன் இயக்கியுள்ள இப்படம் இந்த மாதம் OTT-யில் வெளியாகலாம் என்று கூறப்படுகின்றது. இதை தொடர்ந்து தனுஷுடன் பணியாற்றியது குறித்து மனம் திறந்து பேசியுள்ளார் மாளவிகா மோஹனன்.

அவர் கூறுகையில், “அவருடன் நடித்தது மிகுந்த மகிழ்ச்சியை தந்தது. எனக்கு நடிப்பில் சிறந்த வழிகாட்டியாக நடிகர் தனுஷ் இருந்தார். அவரின் நடிப்பை பார்த்து நான் பல விஷயங்களை கற்றுக்கொண்டேன். மாறன் படத்தில் என் நடிப்பு சிறப்பாக அமைந்தது என்றால், அதற்கு முழு காரணம் தனுஷ் மட்டும் தான்” என்று கூறியுள்ளார். இந்நிலையில் சமீபத்தில் இப்படத்திலிருந்து தனுஷ் எழுதி பாடிய சிட்டுக்குருவி பாடல் வைரலாகி வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.