• Sun. Aug 9th, 2026
WhatsAppImage2026-08-06at2018242
previous arrow
next arrow
Read Now

பல்வேறு சர்ச்சைகளைக் கடந்து இன்று திரையரங்குகளில் ஜனநாயகன் திரைப்படம்..,

BySeenu

Jul 23, 2026

தமிழக முதல்வரும் நடிகர்ருமான விஜய் நடிப்பில் இயக்குனர் வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள ஜனநாயகன் திரைப்படம் பல்வேறு சர்ச்சைகளைக் கடந்து நீண்ட எதிர்பார்ப்புகளுக்கு பிறகு இன்று திரையரங்குகளில் வெளியாகிறது.

சட்டவிரோதமாக இணையத்தில் வெளியீடு தணிக்கை சான்றிதழ் பிரச்சனை உள்ளிட்டவற்றையெல்லாம் கடந்து இறுதியாக திரையரங்குகளில் இன்று வெளியாவதால் ரசிகர்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியும் எதிர்பார்ப்பும் உள்ளது. விஜய் நடிப்பில் வெளியாகும் கடைசி திரைப்படம் ஜனநாயகன் என கூறப்படும் நிலையில் ரசிகர்கள் பலரது மத்தியில் நெகிழ்ச்சி கலந்த உணர்வுகளும் காணப்படுகிறது.

இந்நிலையில் தமிழகத்தில் பல்வேறு திரையரங்குகளில் கொண்டாட்ட நிகழ்வுகளில் ரசிகர்களும் தமிழக வெற்றிக்கழக கட்சியினரும் ஈடுபட்டுள்ளனர். அதே சமயம் தமிழ்நாட்டிலேயே ஏழு மணிக்கு முதல் காட்சி திரையிடப்படும் கோவையில் உள்ள பிராட்வே சினிமா திரையரங்கிற்கு ரசிகர்கள் ஆர்வமுடன் வருகை புரிந்தனர்.

சரியாக 7:05 மணிக்கு திரைப்படம் திரையிடப்பட்டது.