• Mon. Sep 7th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

மாணவர்களுக்கு ஆதரவு தெரிவித்து மூட்டா சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம்..,

ByP.Thangapandi

Jul 23, 2026

உசிலம்பட்டியில் டெல்லியில் நடத்தும் மாணவர்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து மூட்டா அமைப்பைச் சேர்ந்த கல்லூரி பேராசிரியர்கள் கோசங்களை எழுப்பி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

நாடு முழுவதும் நீட் தேர்வு ரத்து செய்ய வலியுறுத்தியும் டெல்லியில் போராடிய மாணவர்கள் மீதான தாக்குதலை கண்டித்து பல்வேறு இடங்களில் கல்லூரி மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

டெல்லியில் போராடும் மாணவர்கள் மீது நடத்திய தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், மாணவர்களுக்கு ஆதரவாக பல்வேறு இடங்களில் கல்லூரி முன்பு கல்லூரி பேராசிரியர்கள் கண்டன போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் உள்ள பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் கல்லூரி வளாகம் முன்பு மூட்டா அமைப்பைச் சேர்ந்த கல்லூரி பேராசிரியர்கள் இணைந்து ஏழை மாணவர்களின் மருத்துவக் கனவை எட்டாக்கனியாக்கும் நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி டெல்லியில் போராடும் மாணவர்களுக்கு ஆதரவு தெரிவித்து மூட்டா சங்கத்தின் தலைவர் சுரேஷ் தலைமையில் கண்டன கோஷங்களை எழுப்பி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.